ஐபிஎல் தொடரான கடந்த 11 ஆண்டுகளாக அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு முதல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை அதிகபட்சமாக மும்பை அணி 4 முறையும், சென்னை அணி 3 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன. இதில் ஆண்டுக்கு ஒருமுறை பல வீரர்கள் அணி மாறுவது வழக்கம். அந்தவகையில் இந்த முறை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரஹானே வேறொரு அணிக்கு செல்ல உள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய துணை கேப்டனாக விளங்கும் இவர் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே அறிமுகமாகி விட்டார். அந்த தொடரில் இவர் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அப்போது மும்பை அணியில் பல ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்ததால் இவருக்கு பல போட்டிகளில் அவ்விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருந்தாலும் கடைசியாக 2 போட்டிகளில் மட்டும் இவருக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அத்தனையும் இவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இரண்டு போட்டிகளில் சேர்த்தே வெறும் 4 ரன்கள் தான் குவித்தார். அதன் பின் 2009-ல் அதே மும்பை அணிக்காக விளையாடினார். இம்முறை பல போட்டிகளில் இவர் களமிறங்கினார்.அதாவது 8 போட்டிகளில் 2 அரைசதங்களும் குவித்தார்.
அதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாமல் இருந்த இவருக்கு 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் ஐபிஎல் பயணமும் அடுத்த கட்டத்துக்கு சென்றது. 2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் அந்தாண்டு தனது சிறப்பான பேட்டிங்-ன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். 2015 வரை இவர் ராஜஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாடினார். அதன் பின் அந்த அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்படவே புனே அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் புனே அணிக்காக விளையாடிய இவர் அடுத்த ஆண்டு மீண்டும் தனது பழைய அணிக்கே சென்றார். அந்தாண்டு ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதன் பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஸ்மித் திரும்பிய இவர் துணை கேப்டனாக பதவி ஏற்றார்.
இருந்தாலும் முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணியால் அதன் பின் ஒருமுறை கூட கோப்பைக்கு அருகில் நெருங்க முடியாமல் போனது. அதற்காக அந்த அணி தங்களது அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டது. எதுவும் அவர்களுக்கு பலனளிக்கவில்லை. ரஹானே-வின் ஆட்டமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அணியில் இல்லை. இதனை பயன்படுத்தி கொண்ட டெல்லி அணி அடுத்த ஆண்டு நடைபெற விருக்கும் ஐபிஎல் தொடருக்காக ரஹானே-வை தங்களது அணிக்காக தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லி அணி இப்படி தான் கடந்த ஆண்டு ஷிகர் தவானை தங்களது அணிக்காக தேர்வு செய்து அதற்க்கு பதிலாக மூன்று வீரர்களை சன்ரைசர்ஸ் அணிக்காக பரிமாற்றம் செய்தது. அதே முறையில் இம்முறையில் ரஹானேவை அணிக்கு தேர்வு செய்து அவர்களுக்காக சில வீரர்களை ராஜஸ்தான் அணிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே முறையிலோ சமீபத்தில் மும்பை அணி தங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்கண்டே-வை அணிக்கு பரிமாற்றம் செய்து அவருக்கு பதிலாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் ருதேர்போர்டை தேர்வு செய்தது. இந்தவகையில் இந்த பரிமாற்றத்தை ராஜஸ்தான் அணி ஏற்கும் பட்சத்தில் ரஹானே டெல்லி அணியில் ஷிகர் தவான் உடன் துவக்க வீரராக களமிறங்குவதை நம்மால் காண முடியும்.