உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் பிளேஆப் சுற்றுகள் விறுவிறுப்பாக அரங்கேறி வருகின்றது. முதலில் நடந்த குவாலிபைர் 1 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை அணியுடன் குவாலிபைர் 2 போட்டியில் விளையாட, டெல்லி மற்றும் ஹைத்ராபாத் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் களம்கண்டனர்.
இந்த எலிமினேட்டர் போட்டியானது விசாகபட்டணம் ஆடுகளத்தில் அரங்கேறியது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கப்தில் மற்றும் சாஹா களம்கண்டனர். இதில் கப்தில் அதிரடியாக ரன்கள் சேர்க்க சாஹா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பவர்பிளே ஓவர் முடிவில் 50 ரன்களை கடந்து அற்புதமான தொடக்கத்தை கண்டது SRH அணி. ஆனால் கப்தில் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழக்க, ரன் வேகம் மிகவும் தாழ்வைநோக்கி சென்றது.
ஒரு கட்டத்தில் பாண்டே மற்றும் கேப்டன் வில்லியம்சன் தனது விக்கெட்களை இழக்க, பின்பு வந்த ஷங்கர் மற்றும் நபி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.
முன்வினை:
அந்த தருணத்தில் கடைசி ஓவரை வீசவந்தார் கீமோ பால். கடைசி கட்ட நேரத்தில் கீமோ பால் பந்தின் வேகத்தை கூட்டி குறைத்து போட நபி சற்று தடுமாறி கொண்டிருந்தார். இருந்த போதும் ஒரு சிக்ஸர் அடித்து களத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். பின்பு வரிசையாக இரண்டு டாட் பால்கள் வர, தொடர்ந்து அடுத்த பாலையும் அடிக்க தவறினார். இதனால் மறுமுனையில் நின்ற தீபக் ஹூடா ஸ்ட்ரைக்கை மாற்ற ஓடி வந்தார். இதனை கண்ட ரிஷப் பண்ட் ஸ்டம்ப்சை நோக்கி எறிந்தார். ஒரு வழியாக தீபக் ஹூடா அந்த எல்லையை அடைய, மறு எல்லையை கடக்க நபி வீறுகொண்டு ஓடிக்கொண்டிருந்தார்.
இப்போது ஸ்டம்ப்ஸ்ஐ நோக்கி எறிந்த பந்து அந்த பக்கமாக வந்து கொண்டிருக்க, பந்துவீச்சாளர் அதை பிடித்து அடிக்க முற்பட, நபி மறுமுனையை அடைய ஓட. மூன்றும் ஒரே இடத்தில் சங்கமம், "குபிர்ர்..." நபி, கீமோ பால் குறுக்கே வந்ததால் இருவரும் முட்டி கீழே விழுந்தனர். ஆனால் அதில் சுண்டெலி அளவில் இருக்கும் பந்து மட்டும் தப்பி பிழைத்து மறுமுனையில் இருக்கும் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.
ஆடுகளத்தில் ஒரே நிசப்தம், இது அவுட் தான் என தெரிந்தும் கீமோ பால் குறுக்கே வந்ததால் தான் நபியால் ரன் எடுக்க முடியவில்லை என SRH தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்று நடுவருக்கு டெல்லி அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரிடம் விவாதித்தனர். முதலில் விட்டுக்கொடுத்த ஐயர், பின்பு ரிஷாப் பண்டின் வற்புறுத்தலால் (அதாவது கீமோ பால் வேண்டுமென்றே அதை செய்யவில்லை அவர் பந்தை பிடிக்க மட்டுமே வந்தார், அந்த நிகழ்வுக்கு நாம் பொறுப்பல்ல என்பது போல விளக்கினார்) தனது முடிவை மாற்றிக்கொண்டார் ஐயர்.
இறுதியாக நபி வெளியேற்றப்பட்டார், டெல்லி அணிக்கு இலக்காக 162 ரன்கள் நிர்ணயிக்கபட்டது.
பிறகு நடுநிலையான இலக்கை அடைய அதிரடியான ரன் குவிப்பில் இறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அதற்கு காரணம் பேசில் தம்பி, நபி வீசிய பந்தை ப்ரித்வி ஷா அடிக்க அந்த கேட்சை பிடிக்க தவறினார். அப்போது அவர் அடித்த ரன்கள் வெறும் 17, இதனை பயன்படுத்தி கொண்ட ஷா தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தார். மற்றொரு முனையில் அடுத்து அடுத்து விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. உடனே ஷாவும் தனது அரைசதத்தை கடந்த நிலையில் வெளியேறினார். இந்த சறுக்கலை ஏற்படுத்தியது கலீல் அஹ்மத்.
இறுதியாக பண்ட் மற்றும் காலின் மன்ரோ, இருவரும் இணைந்து டெல்லி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இருவரும் அதிரடியாகவும் நேர்த்தியாகவும் ரன்கள் சேர்த்தனர். 5 ஒவேர்களுக்கு 52 அடிக்க வேண்டும் என்ற நிலையில் ரஷீத் கான் ஒரே ஒவேரில் மண்ரோ மற்றும் அக்ஸார் பட்டேல் ஆகியோரை வதம் செய்தார்.
எதிர்வினை:
இதை அடுத்து ருதர்போர்ட் மற்றும் பண்ட் அதிரடியில் இறங்கினர். பசில் தம்பி ஓவரை நார் நாராக கிழித்து வெற்றியை ஒரு வழியாக உறுதி செய்தார் பண்ட். ஆனால் இவரை பற்றி தான் ஊருக்கே தெரியுமே, ஆட்டத்தை முடிக்க தெரியாதவர் என்று. ருதர்போர்ட் மற்றும் பண்ட் புவேனஸ்வர் குமார் ஒவேரில் வெளியேற, கடைசி ஒவேரில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் வர, கடைசி மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் அமித் மிஸ்ரா பந்து வீசுவது கலீல் அஹ்மத், அவர் பந்தை மெதுவாக வீச மிஸ்ரா அந்த பந்தை அடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கீமோ பால் ஒரு ரன் எடுக்க ஓடினார். உடனே சுதாரித்து கொண்ட கீப்பர் சாஹா பந்தை கலீலிடம் தூக்கி எறிந்தார்.
இதில் மறுமுனையை அடைய மிஸ்ரா ஓட, பந்தை பிடித்த கலீல் அஹ்மத் ஸ்டம்ப்பை நோக்கி எரிய குறுக்கே சென்று வழிமறித்தார் புத்திசாலி மிஸ்ரா. பந்து ஸ்டம்ப்பை தகர்க்கவில்லை, "ஸ்கோர் டை" மகிழ்ச்சியில் டெல்லி வீரர்கள்......"WAIT"..... அப்பீல் செய்தார் கலீல் அஹ்மத்.
எதற்கு, பீல்டெரின் குறுக்கே சென்று வழிமறித்தார் மிஸ்ரா என்று. நல்ல மனிதர் வில்லியம்சனும் வெற்றி வேண்டும் அல்லவா சரி என ஒப்புக்கொண்டார். மூன்றாவது நடுவர் பலமுறை ரிப்பிளே பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது அமித் மிஸ்ரா வேண்டுமென்றே தான் நடுவில் புகுந்து ஓடினார் அதனால் அவர் அவுட்.
ரன் கணக்கும் இல்லை தற்போது 2 பந்துகளை இரண்டு ரன்கள் தேவை, கலீல் வீச கீமோ பால் பௌண்டரி அடித்து சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தார்.
கருத்து:
இந்த போட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் இருந்தாலும், இந்த இரு நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியின் நிலைத்தன்மையை சோதித்தது. விளையாட்டு உணர்வோடு விளையாடும் அணி பட்டியலில் இந்த வருடம் இரு அணிகளும் சமபுள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் இருக்கின்றன.
ஆனால் முக்கியமான இந்த தருணத்தில் இரு அணிகளும் வெற்றியின் பக்கம் நின்று விளையாட்டு உணர்வை பின் தள்ளினர். எது எப்படியோ...இது முழுவதும் என் கருத்தே, உங்கள் கருத்து என்னவோ..?
"மாற்றம் ஒன்றே மாறாதது, சூழ்நிலை அதற்கு வழிவகுக்கும்".