சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியை மிரட்டிய ராபாடா 

Pravin
ராபாடா
ராபாடா

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10வது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் நிக்ஹில் நாயக் இருவரும் களம் இறங்கினர். நிக்ஹில் நாயக் 7 ரன்னில் சந்தீப் லாமிச்சனே பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ராபின் உத்தப்பா 11 ரன்னில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய நிதிஷ் ராணா 1 ரன்னில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் நிலைத்து விளையாட கிறிஸ் லின் 20 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். கொல்கத்தா அணி 44-4 என்ற நிலையில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அதன் பின்னர் சுப்மான் கில் 4 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

ரஸல்
ரஸல்

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரஸல் மற்றும் கார்த்திக் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை மீட்டு வந்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 28 பந்தில் 62 ரன்களை குவித்தார். ரஸல் 6 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடித்து 62 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசி 50 ரன்னில் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் எடுத்தது.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

அதன் பின்னர் களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர். தவண் 16 ரன்னில் சாவ்லா பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்த களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து விளையாடினார். 43 ரன்கள் அடித்த ஷ்ரேயஸ் ஐயர் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பன்ட் 11 ரன்னில் குல்திப் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பிரித்திவ் ஷா 99 ரன்னில் அவுட் ஆகினார். இந்த விக்கெட் ஆட்டத்தின் போக்கினை மாற்றியது.

பிரித்திவ் ஷா
பிரித்திவ் ஷா

கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைபட்ட நிலையில் டெல்லி அணி 5 ரன்கள் மட்டுமே அடிக்க ஆட்டம் டிரா ஆனது. இதை தொடர்ந்து சூப்பர் ஓவரின் முறை மூலம் ஆட்டத்தின் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய டெல்லி அணி 10 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடி கொல்கத்தா அணி 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. திரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பிரித்திவ் ஷா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links