டெல்லி அணியை வீழ்த்தி முதல் போட்டியின் தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி 

Pravin
ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக எட்டு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 34வது லீக் போட்டி நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் எற்கனவே இந்த தொடரில் மோதிய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாண்டியா பிரதர்ஸ்
பாண்டியா பிரதர்ஸ்

அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர். நிலைத்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பென் கட்டிங் 2 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் குயிடன் டி காக் 35 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

அதனை அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் க்ருநாள் பாண்டியா இருவரும் நிலைத்து விளையாடிய நிலையில் சூரியகுமார் யாதவ் 26 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பாண்டியா பிரதர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஹர்டிக் பாண்டிய சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 15 பந்தில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் அடித்தது. டெல்லி அணியில் ராபாடா 2, மிஸ்ரா 1, அக்ஷார் படேல் 1 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர். இந்த தொடக்க ஜோடியின் தொடக்க ஆட்டம் மட்டுமே இந்த இன்னிஸில் சிறப்பாக அமைந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ஷிகார் தவண் 35 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் பிரித்திவ் ஷாவும் 20 ரன்னில் அதே ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார்.

மும்பை இன்டியன்ஸ்
மும்பை இன்டியன்ஸ்

இதை அடுத்து வந்த கொலின் முன்ரோ 3 ரன்னில் க்ருநாள் பாண்டியா ஓவரில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 3 ரன்னில் ராகுல் சஹாரிடம் அவுட் ஆக அடுத்து வந்த அதிரடி வீரர் ரிஷப் பன்ட் 7 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க டெல்லி அணி தோல்வி நோக்கி சென்றது. மும்பை அணி சிறப்பான பந்து வீச்சின் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links