இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி வார லீக் போட்டிகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 53வது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின. எற்கனவே டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் வர வேண்டிய கட்டயத்தில் உள்ளது. அதே போல் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் லீயான் லிவிங்ஸ்டன் மற்றும் அஜிங்கா ரஹானே இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் ரஹானே 2 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 5 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து லோம்றோரும் 8 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க ராஜஸ்தான் அணி 30-4 என்ற மோசமான நிலையில் இருந்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய ரீயான் பராக் நிலைத்து விளையாடினார். பராக் சிறப்பாக விளையாடிய போதிலும் மறுமுனையில் விக்கெட்கள் சரிந்து கொண்டே இருந்தது. ஷ்ரேயாஸ் கோபால் 12 ரன்னிலும் பின்னி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் மிஸ்ராவின் சுழிலில் வீழ்ந்தனர். நிலைத்து விளையாடி பராக் கடைசி ஓவரில் அதிரடி காட்ட அரைசதம் விளாசினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 115-9 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் சிறப்பான தொடக்கம் இல்லாமல் தவிர்தது. கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஷிகார் தவண் 16 ரன்னில் அவுட் ஆக அவருடன் பிரித்திவ் ஷாவும் 8 ரன்னில் அதே ஈஸ் சோதி ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினாலும் 15 ரன்னிலேயே அவுட் ஆகினார். ரிஷப் பன்ட் வழக்கத்தைவிட இந்த போட்டியில் பொறுமையாக விளையாடினார்.
அதன் பின்னர் வந்த இங்ரம் 12 ரன்னில் ஈஸ் சோதி பந்தில் அவுட் ஆக ருதர்போட்டும் 11 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். நிலைத்து விளையாடிய ரிஷப் பன்ட் அரைசதம் விளாச டெல்லி அணி 16.1 ஓவரிலேயே வெற்றி இழக்ககை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி இரண்டாம் இடம் பிடித்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.