டெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது சன்ரைசர்ஸ் அணி

Pravin
வார்னர் மற்றும் பேர்ஸ்ரோ
வார்னர் மற்றும் பேர்ஸ்ரோ

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவாண் இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிரித்திவ் ஷா 11 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து விளையாடினார். ஷிகார் தவாண் 12 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் அதிரடி வீரர் ரிஷப் பன்ட் 5 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனை அடுத்து களம் இறங்கிய ராகுல் திவேட்டியா 5 ரன்னில் சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆகினார்.

ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் அடுத்து களம் இறங்கிய இங்கிரம் 5 ரன்னில் சீத்தார்த் கௌவுல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து நிலைத்து விளையாடிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 43 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கிரிஸ் மோரிஸ் 17 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ராபாடா 3 ரன்னில் கௌவுல் பந்தில் அவுட் ஆக கடைசி ஓவரில் அக்ஷார் படேல் 13 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 129-8 ரன்கள் எடுத்தது.

பேர்ஸ்ரோ
பேர்ஸ்ரோ

இதை அடுத்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜேன்னி பேர்ஸ்ரோ இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் வழக்கம் போல் அதிரடியாக விளையாட முதல் ஆறு ஓவர்களில் 62 ரன்களை குவித்தது இந்த ஜோடி. அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய பேர்ஸ்டோ 28 பந்தில் 48 ரன்கள் அடித்து ராகுல் திவேட்டியா பந்தில் அவுட் ஆகினார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரிலேயே முதல் முறையாக இந்த ஜோடி 100 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. இதை அடுத்து விஜய் சங்கர் களம் இறங்கினார்.

டேவிட் வார்னர் 10 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய மனிஷ் பான்டே 10 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக விஜய் சங்கர் 16 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த தீபக் ஹூடா 10 ரன்னில் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து யூசுப் பாதன் மற்றும் நபி நிலைத்து விளையாட ஐத்ராபாத் அணி 18.3 ஓவரில் 131 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது ஐத்ராபாத் அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பேர்ஸ்ரோ தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links