கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி

Pravin
பிரிதிவ் ஷா
பிரிதிவ் ஷா

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே-ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டி நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று எலிமினேடர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி இந்த தொடரைவிட்டு வெறியேறும் என்பதால் இந்த போட்டியின் மீது மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் விர்திமான் சாஹா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் மார்டின் கப்தில் ஆனால் மறுமுனையில் சாஹா 8 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மனிஷ் பான்டே நிலைத்து விளையாட மார்டின் கப்தில் அதிரடியாக விளையாடி 36 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார்.

அமித் மிஸ்ரா
அமித் மிஸ்ரா

அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் மனிஷ் பான்டே 30 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் விக்கெட்டை இழக்க அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். விஜய் சங்கர் 25 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆக கீமோ பால் வீசிய 20 வது ஓவரில் நபி மற்றும் ரஷித் கான் , ஹூடா அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162-8 ரன்களை அடித்தது.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அதன் பின்னர் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரிதிவ் ஷா இருவரும் களம் இறங்கினர். வழக்கத்திற்கு மாறாக இந்த போட்டியில் முதலில் பிரிதிவ் ஷா அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பிரிதிவ் ஷா பவுண்டரிகளை விளாச மறுமுனையில் ஷிகார் தவண் அவசரப்பட்டு 17 ரன்னில் தீபக் ஹூடா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையில் கலில் அஹமது விசிய 11வது ஓவரில் பிரிதிவ் ஷா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.

ரஷித் கான்
ரஷித் கான்

இதை தொடர்ந்து ஆட்டத்தின் போக்கே மாறியது. அடுத்து வந்த கொலின் முன்ரோ மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் முன்ரோ 14 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அக்ஷார் படேல் அதே ஓவரில் டக்அவுட் ஆகினார். அதன் பின்னர் தம்பி வீசிய 18வது ஓவரில் ரிஷப் பண்ட் அதிரடி காட்ட ரன்னின் வேகம் அதிகரித்தது. அடுத்த ஓவரிலேயே ரிஷப் பண்ட் அவுட் ஆகிய நிலையில் கடைசி ஓவர் வரை சென்று திரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இந்த வெற்றியின் மூலம் குவாலிஃபையர் 2 க்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now