கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே நடக்கவுள்ள போட்டியில் டில்லியின் உத்தேச அணி

டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள்
டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள்

பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்‌ வெற்றிகரமாக தொடங்கி வழக்கமான குதூகலத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் வரும் வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் தில்லி காப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த இந்தியன் பிரீமியர் லீக் 2019 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. தனது பெயரை மாற்றிக்கொண்டு ஷிரயாஸ் ஐயரின் தலைமையில் தில்லி அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதனிடையே கொல்கத்தா அணி வெறும் இரண்டே இரண்டு தோல்விகளையே சந்தித்து உள்ளது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான தலைமையால் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எனினும் சென்ற போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோல்வியிலிருந்து மீண்டுவர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தொடர் தோல்வியில் இருந்து எழுந்துவர தில்லி கேப்பிட்டல்ஸ் அணியும் போராடத் துணியும் என நம்பலாம்.

இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த சென்ற போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று பரபரப்பாக முடிந்ததை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதனிடையே தினேஷ் கார்த்திக், நித்திஷ் ரானா, ராபின் உத்தப்பா, ரசூல் போன்ற தரமான ஆட்டக்காரர்களை தில்லி அணி எவ்வாறு யாரைக் கொண்டு சமாளிக்கப் போகிறது என இக்கட்டுரையில் காணலாம்.

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவானும் முன்னாள் கேப்டனும் ஆகிய ரிக்கி பாண்டிங் வழிநடத்தலில் இந்தியன் பிரீமியர் லீகின் இளம் அணி எனக் கருதப்படும் தில்லி கேப்பிடல்ஸின் உத்தேச அணியை அலசலாம்.

1. பிரித்வி ஷா

இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என கருதப்படும் இளம் வீரர் பிரித்வி ஷா. தனது கேப்டன்சி திறமையால் இந்திய அணிக்கு 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையை வாங்கித் தந்தவர் ஆவார். தில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இவர் இந்த ஐபிஎல் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதே கொல்கத்தா அணிக்கு எதிராக 55 பந்துகளில் 99 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

2. ஷிகர் தவன்

இந்திய அணியின் ஆதர்சன தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் இந்த வருடம் இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது சொந்த அணியான தில்லிக்கு ஆடி வருகிறார். இத்தொடரின் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனினும் இவரது அனுபவம் அணிக்கு தேவை.

3.ஷ்ரேயாஸ் ஐயர்

இந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடக்கம் முதலே ஷ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தலைமைப் பொறுப்புடன் ஆடி வரும் அவர் 6 போட்டிகளில் 215 ரன்கள் குவித்திருக்கிறார்.

4. ரிஷப் பண்ட்

தனது அதிரடி ஆட்டத்தால் மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து வரும் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக நடுநிலை ஆட்டக்காரராக ஆடி வருகிறார். இத்தொடரில் 172.55 என அருமையான ஸ்ட்ரைக் ரேட்டைக்கொண்டு ஆடி வருகிறார்.

5. காலின் இங்ரம்

காலின் இங்ரம் உடைய சிறப்பான டி20 ஆட்டத்தால் டெல்லி அணிக்கு பல இடங்களில் கை கொடுத்துள்ளது. அவரது அனுபவம் மற்றும் ஆட்டம் இப்போட்டியிலும் தேவைப்படலாம்.

6. அக்ஸர் படேல்

இடது கை பந்து வீச்சாளரான அக்ஸர் படேல் இத்தோடரில் 6.53 புள்ளிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். தினேஷ் கார்த்திக், ரஸுல் போன்ற வீரர்களை கட்டுப்படுத்த பயன்படுவார்.

7. கிரிஸ் மோரிஸ்

சிறந்த ஆல்ரவுண்டரான இவர் ககிஸொ ரபாடாவுடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு தலைவலியை வல்லவர். இவரது பங்கு அணிக்கு பக்கபலம்.

8. அர்ஷல் படேல்

அர்ஷல் படேல் சுழற்பந்து வீச்சுக்கு பக்கபலமாக இருக்கக்கூடும். ரஸுல் போன்ற வீரரை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் சுழல் மட்டுமே.

9. ககிஸோ ரபாடா

தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும் டில்லி கேப்பிடல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான ராபாடாவின் வேகம் அணிக்கு இன்றியமையாதது. கொல்கத்தாவிற்கெதிரான கடந்த போட்டியில் இவரது சூப்பர் ஓவர் நினைவிருக்கலாம்.

10. சந்தீப் லமிச்சனெ

இவரது சுழல் அணியின் இக்கட்டான சூழ்நிலையில் ரஸூல் போன்ற வீரரை கட்டுப்படுத்த உதவும்.

11. இஷாந்த் சர்மா

இஷாந்த் சர்மா என்றால் வேகம் மற்றும் அனுபவம். இஷாந்த் சர்மாவின் ஸ்விங் பந்துகல் பவர்ப்பிளே ஓவர்களில் கிரிஸ் லின்னை கட்டுப்படுத்த உதவும்.

Quick Links

App download animated image Get the free App now