ஐபிஎல் 2019: மேட்ச் 19, SRH vs MI , முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Srh vs Mi
Srh vs Mi

2019 ஐபிஎல் தொடரின் 19வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 12 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜீவ்காந்தி மைதானத்தில் நேருக்கு நேர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சொந்த மண்ணான ராஜீவ்காந்தி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 6 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ராஜீவ்காந்தி மைதானம் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சிறப்பாக இருக்கும்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. இதன்மூலம் புள்ளி அட்டவனையில் முதலிடத்தை பிடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதனை தக்கவைத்துக் கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் இன்று நடைபெறவிருக்கும் மற்றொரு போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் முதலிடத்தை பிடிக்கும்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், விஜய் சங்கர்

ஜானி பேர்ஸ்டோவ் பெங்களூரு அணியை தொடரந்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 28 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்களை விளாசித் தள்ளினார். ஆரஞ்சு நிற தொப்பியை ( 2019 ஐபிஎல் இல் அதிக ரன்களை விளாசியவர்) தன் வசம் வைத்துள்ள டேவிட் வார்னர் கடந்த போட்டியில் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் மீண்டும் ஒரு அற்புதமான தொடக்கத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் மற்றும் மனிஷ் பாண்டே வலிமையாக திகழ்வது இந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், முகமது நபி

தனது முழு பந்துவீச்சை ஹைதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெளிபடுத்தியது. பந்துவீசிய அனைவருமே விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷீத் கான் மற்றும் சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹேடா, யுஸப் பதான், ரஷீத் கான், முகமது நபி, புவனேஸ்வர் குமார்(கேப்டன்), சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.

மும்பை இந்தியன்ஸ்

Mumbai Indians
Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே ஆட்டத்திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், டிகாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்களை விளாசினார். இவருடன் குருநால் பாண்டியா கைகோர்த்து 32 பந்துகளில் 43 பந்துகளை எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான டிகாக்(4), ரோகித் சர்மா (13), யுவராஜ் சிங் (4) கடந்த போட்டியில் மோசமாக விளையாடினர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற வேண்டுமெனில் இவர்களது பேட்டிங் பங்களிப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிச்சயமாக தேவைப் படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ்பிரிட் பூம்ரா, குருநால் பாண்டியா

லசித் மலிங்கா மற்றும் ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லசித் மலிங்கா தனது தாய் நாட்டில் நடந்துவரும் உள்ளூர் ஒருநாள் தொடரில் பங்கேற்க சென்று விட்டதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்க மாட்டார். கடந்த போட்டியில் அணிக்கு திரும்பிய ஜெஸன் பெஹாரன்ஆஃப் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அம்பாத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரது விக்கெட்டுகளை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வீழ்த்தினார். கேப்டன் ரோகித் சர்மா ஜெஸன் பெஹாரன்ஆஃப் மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ரா ஆகியோரை வைத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக கடும் நெருக்கடியை அளிப்பார் என தெரிகிறது. லசித் மலிங்காவிற்கு பதிலாக பென் கட்டிங் அல்லது மிட்செல் மெக்லகன் அணிக்கு திரும்பலாம் என தெரிகிறது.

உத்தேச XI: ரோகித் சர்மா (கேப்டன்), டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, குருநால் பாண்டியா, கீரன் பொல்லார்ட், மிட்செல் மெக்லகன், ஜெஸன் பெஹாரன்ஆஃப், ஜாஸ்பிரிட் பூம்ரா, ராகுல் சகார்/மயான்க் மார்கண்டே.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications