ஐபிஎல் 2019: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Delhi Capitals vs Kolkata Knight riders
Delhi Capitals vs Kolkata Knight riders

டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 2019 ஐபிஎல் தொடரில் 10வது போட்டியில் மார்ச் 30 அன்று பெரோசா கோட்லா மைதானத்தில் மோத உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் 3வது தொடர் வெற்றியை குவிக்கும் நோக்கில் களமிறங்க உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 21 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் வென்று உள்ளது.

பெரோஷா கோட்லா மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 8 போட்டிகளில் பங்கேற்று உள்ளது. இதில் கொல்கத்தா 3 மட்டுமே முறை வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்து சிறப்பாக திரும்பும் வகையில் இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Kolkata Knight riders
Kolkata Knight riders

கடந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதியில் தோல்வியுற்ற கொல்கத்தா அணி 2019 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான முதல் இரு லீக் போட்டியில் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தை வகிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ராபின் உத்தப்பா, ஆன்ரிவ் ரஸல், நிதிஷ் ராணா

கொல்கத்தா அணியில் ஆன்ரிவ் ரஸல் முதல் இரு வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரது அதிரடி ஆட்டம் ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 19 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்களும், கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 48 ரன்களையும் விளாசியுள்ளார் ஆன்ரிவ் ரஸல்.

நிதிஷ் ராணா-வும் இவரைப் போலவே முதல் போட்டியில் 47 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களும், இரண்டாவது போட்டியில் 34 பந்துகளில் 63 ரன்களையும் குவித்துள்ளார். ராபின் உத்தப்பா இரு போட்டிகளில் பங்கேற்று 102 ரன்களை அடித்துள்ளார். அணியின் கேப்டன் இவர்களுடைய இதே ஆட்டத்திறனை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் எதிர்பார்ப்பார்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: குல்தீப் யாதவ், ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா

ஆன்ரிவ் ரஸல் கொல்கத்தா அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ப்யுஷ் சாவ்லா தனது சுழற்பந்து வீச்சில் இரு போட்டிகளிலும் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினார். இவர்களுடைய இந்த ஆட்டம் அந்த அணிக்கு கண்டிப்பாக தேவை. இவர்களை தவிர குல்தீப் யாதவ் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய இருவரும் எதிரணியை தங்களது பௌலிங்கில் திணறடிக்கின்றனர். இந்த பௌலிங் ஆக்ஷன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, ஆன்ரிவ் ரஸல், சுப்மன் கில், தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லாங்கி பெர்குசன், குல்தீப் யாதவ், பிரஸித் கிருஷ்ணா, ப்யுஷ் சாவ்லா.

டெல்லி கேபிடல்ஸ்

Delhi Capitals
Delhi Capitals

கொல்கத்தாவைப் போலவே, டெல்லி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அனுபவம் வாயந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஷிகார் தவான், காலின் இன்கிராம், ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 27 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். இரண்டாவது போட்டியில் 13 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் இதே ஆட்டத்திறனை கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தொடர்வார். ஷிகார் தவான் இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். டெல்லி அணியின் தொடக்கம் சிறப்பாக உள்ளது.

காலில் இன்கிராம், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தங்களை நிரூபிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே, அமித் மிஸ்ரா

அமித் மிஸ்ரா கடந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 38 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஸர் படேல் சென்னை அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார்.

காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா, கிறிஸ் மோரிஸ் வேகப்பந்து வீச்சை கவணித்து கொள்வர். ரபாடா மற்றும் இஷாந்த் சர்மா இரு போட்டிகளிலும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் ரபாடா 20 டாட் பந்துகளை தனது பௌலிங்கில் அளித்துள்ளார். இதே ஆட்டத்திறனை கொல்கத்தா அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள்.

உத்தேச XI: பிரித்வி ஷா, ஷிகார் தவான், ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, காலின் இன்கிராம், காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே, அக்ஸர் படேல்.

Quick Links

App download animated image Get the free App now