2019 ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை இன்று டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 12 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பெரோஷா கோட்லா மைதானத்தில் நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் சொந்த மண்ணான பெரோஷா கோட்லா மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக 4 போட்டிகளில் பங்கேற்று 1 போட்டியில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
கள ரிப்போர்ட்: பேட்டிங்கிற்கு சாதகமான கோட்லா மைதானம் அதிக ரன்கள் குவிக்க கூடியதாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.
டெல்லி கேபிடல்ஸ்
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் மோசமான ஆட்டத்தை கண்டு அந்த அணியின் ரசிகர்கள் அதிர்ந்துள்ளனர். சற்று எளிதாக அடையக்கூடிய இலக்கை அடையாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஷிகார் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட்
பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் டெல்லி அணியின் 5 வீரர்களின் கடும் சொதப்பளினால் 2019 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரு வெற்றிகளை டெல்லி கேபிடல்ஸ் அணியால் குவிக்க முடியாமல் போனது. இதில் கோல்டன் டக் ஆன பிரித்வி ஷா-வும் அடங்குவார். ஷிகார் தவான் (30), காலின் இன்கிராம் (38), ரிஷப் பண்ட் (39), ஸ்ரேயாஸ் ஐயர் (22) ஆகியோர் மட்டுமே பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங்கில் சிறிது நெருக்கடியை அளித்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமிருந்தும் சிறப்பான ஆட்டத்தை ஹைதராபாத் அணிக்கு எதிராக எதிர்பார்க்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவரது அதிரடியை டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் எதிர்பார்க்கிறார்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, சந்தீப் லாமிச்சனே, கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ் கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 30 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னணி பௌலரான காகிஸோ ரபாடா பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 32 ரன்களை தனது பௌலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவருடன் சந்தீப் லாமிச்சனே 4 ஓவர்களை வீசி 27 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்த 3 பௌலர்களை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக பயன்படுத்தி அந்த அணியின் பேட்ஸ்மேன்களூக்கு நெருக்கடி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
உத்தேச XI: ஷிகார் தவான், பிரித்வி ஷா, காலின் இன்கிராம், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விகாரி, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல்/அக்சர் படேல், சந்தீப் லாமிச்சனே, காகிஸோ ரபாடா/டிரென்ட் போல்ட், அமித் மிஸ்ரா/ஏவிஸ் கான்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அருமையான முறையில் அசத்தி வருகிறது. புள்ளி அட்டவனையில் முதலிடத்தை வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வழக்கமான கேப்டன் கானே வில்லியம்சன் தற்போது வரை காயம் காரணமாக அவதிபட்டு வருகிறார். எனவே இந்த போட்டியிலும் அவருக்கு ஹைதராபாத் அணி நிர்வாகம் ஓய்வளித்துள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், விஜய் சங்கர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் (55 பந்துகளில் 100 ரன்கள்) மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ( 56 பந்துகளில் 112 ரன்கள்) ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 185 ரன்களுக்கு பார்டன்ர் ஷீப் செய்து விளையாடினர். இதே ஆட்டத்திறனை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்த இருவரும் முயலுவர். விஜய் சங்கரின் ஸ்ட்ரைக் ரேட் 200-ஆக உள்ளது. இது எதிரணியினருக்கு கடும் பயத்தை ஏற்படுத்தும். அத்துடன் அனுபவ வீரர் மனிஷ் பாண்டே ஆட்டத்தை சிறப்பான முறையில் எடுத்துச் செல்வதில் வல்லவர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை எடுத்து வந்தால் விஜய் சங்கர் மற்றும் மனிஷ் பாண்டே ஆட்டத்தை மிடில் ஆர்டரில் முடித்து வைப்பர்.
பௌலிங்:
நட்சத்திர வீரர்கள்: புவனேஸ்வர் குமார், முகமது நபி, ரஷீத் கான்
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நபி சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிக ரன் இலக்கை சேஸிங் செய்யும் நோக்கில் களமிறங்கிய பெங்களூரு அணியை தனது சுழலால் கடும் நெருக்கடியை அளித்த முகமது நபியின் ஆட்டம் டெல்லி அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. சந்தீப் சர்மா 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் விராட் கோலியும் அடங்குவார். கோட்லா மைதானம் மெதுவாக வீசும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், கானே வில்லியம்சன்/தீபக் ஹேடா, மனிஷ் பாண்டே, யுஸப் பதான், ரஷீத் கான், ஷபாஜ் நதீம்/முகமது நபி, புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்.