ஐபிஎல் 2019: மேட்ச் 21, RR vs KKR முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Ajinkya Rahanae vs Dinesh Karthik
Ajinkya Rahanae vs Dinesh Karthik

2019 ஐபிஎல் தொடரின் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன் ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மன்சிங் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. ஆன்ரிவ் ரஸலின் அதிரடியில் போட்டி அட்டவனையில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 18 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 8 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றனர். கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியுடனான கடைசி 3 போட்டிகளிலும் தொடர் வெற்றியை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவாய் மான் சிங் மைதானத்தில் நேருக்கு நேர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மண்ணான சவாய் மான் சிங் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சவாய் மான் சிங் மைதானம் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Kolkata Knight riders
Kolkata Knight riders

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆட்டத்திறன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாகவே பூர்த்தி செய்துள்ளது என்று கூறலாம். இந்த அணியின் தூணாக திகழும் ஆன்ரிவ் ரஸல் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை தனது பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அளிக்கிறார். கொல்கத்தா அணி இந்த சீசனில் 4 போட்டிகளில் பங்கேற்று 3ல் வெற்றியும் 1 போட்டியில் டிராவும் ( சூப்பர் ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி) ஆகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொல்கத்தா அணியை எதிர்கொள்வது உண்மையாகவே பெரும் சவாலாகவே இருக்கும்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், கிறிஸ் லின், நிதிஷ் ராணா

ஆன்ரிவ் ரஸல் கடந்த போட்டியில் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால் இந்த போட்டியிலும் பெங்களூரு அணியின் வெற்றி கனவு கனவாகவே மாயமானது. கொல்கத்தா அணியின் பொக்கிஷமாக திகழும் ஆன்ரிவ் ரஸல் ராஜஸ்தான் பௌலர்ளுக்கு தனது பேட்டிங்கில் கடும் நெருக்கடியை அளிப்பார். நிதிஷ் ராண மற்றும் ராபின் உத்தப்பா மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின் கடந்த போட்டியில் 31 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். இந்த 3 பேட்ஸ்மேன்களும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அருமையான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா

அதிரடி மன்னன் ஆன்ரிவ் ரஸல் பேட்டிங் மட்டுமல்லாமல் பௌலிங்கிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ப்யுஸ் சாவ்லா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த மூன்று பௌலர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சற்று நெருக்கடியை அளிப்பார்கள் என தெரிகிறது.

உத்தேச XI: சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா, பிரஸித் கிருஷ்ணா, லாக்கி பெர்குசன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

Rajasthan royals
Rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இந்த சீசனின் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. எனவே இதே ஆட்டத்திறனை ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, ஸ்டிவன் ஸ்மித்

சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பெங்களூரு அணியுடனான கடந்த போட்டியில் களமிறங்கவில்லை. இந்த போட்டியில் களமிறங்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் தான் ஆடிய சிறப்பான அதே ஆட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் சஞ்சு சாம்சன் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாஸ் பட்லர் இந்த சீசனில் இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளில் அரைசதங்கள் விளாசியுள்ளார். எனவே இவரது இந்த பேட்டிங் கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. அஜீன்க்யா ரகானே மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் நிலைத்து விளையாடும் ஆட்டத்திறனை இவர்கள் பெற்றுள்ளனர்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: ஸ்ரேயஸ் கோபால், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர்

ஸ்ரெயஸ் கோபால் பெங்களூரு அணியுடனான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது இந்த ஆட்டத்தினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாதகமாக போட்டி திரும்பியது. எனவே தனது சொந்த மண், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அவருக்கு உதவும் என தெரிகிறது. இவரை தவீர பென் ஸ்டோக்ஸ் (4 விக்கெட்டுகள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் (3 விக்கெட்டுகள்) ராஜஸ்தான் அணியின் முன்னணி பௌலர்களாக திகழ்கின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த இவர்கள் திட்டமிடுவர்.

உத்தேச XI: அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராகுல் திர்பாதி, ஸ்டிவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கௌதம், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால், தவால் குல்கர்னி, வரூன் ஆரோன்/ஸ்டுவர்ட் பின்னி.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now