ஐபிஎல் 2019, மேட்ச் 27, MI vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Ajinkya Rahanae vs RohitSharma
Ajinkya Rahanae vs RohitSharma

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2019 ஐபிஎல் தொடரின் 27வது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோத உள்ளன.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 21 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 6 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ்

Mumbai Indians
Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அதிக ரன்களை சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்திறனை தடுமாறி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும் மும்பை இந்தியன்ஸ் அணி வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, கீரன் பொல்லார்ட், குவின்டன் டிகாக்

கீரன் பொல்லார்ட் (31 பந்துகளில் 83 ரன்கள்) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த போட்டியில் இவர் 10 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரிகளை விளாசினார். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கீரன் பொல்லார்டின் ஆட்டத்திறன் தொடரும் என நம்பப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டுள்ள ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ராஜஸ்தானிற்கு எதிரான போட்டியில் இவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

குவின்டன் டிகாக் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் இந்த சீசனில் மும்பை அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர்களுக்கு கடும் நெருக்கடியை இவர்கள் அளிப்பார்கள் என தெரிகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: அல்ஜாரி ஜோசப், ஜாஸ்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஹாப்

அல்ஜாரி ஜோசப் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது முதல் ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தவில்லை. எனவே ராஜஸ்தானிற்கு எதிரான போட்டியில் தனது அனல் பறக்கும் பந்துவீச்சை மீண்டும் வெளிக்கொணர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா கடந்த போட்டியில் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் தனது பௌலிங்கில் 57 ரன்களை அளித்திருந்தார். எனவே இந்த தவறை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சரி செய்து கொள்வார் என நம்பப்படுகிறது.

பூம்ரா மற்றும் ஜேஸன் பெஹாரன்ஆஃப் இந்த சீசனில் முறையே 6 விக்கெட்டுகள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்)/ இவின் லீவிஸ், சூர்ய குமார் யாதவ், இசான் கிஷான், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, ராகுல் சகார், அல்ஜாரி ஜோசப், ஜாஸ்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஆஃப்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

Rajasthan royals
Rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் நூழிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஆதிக்கத்தை சிறப்பான முறையில் ராஜஸ்தான் வெளிப்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. மிகுந்த நெருக்கடியை அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த நெருக்கடியை நீண்ட நேரம் வெளிபடுத்த தவறியதால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், ஸ்டிவன் ஸ்மித், சஞ்சு சாம்சன்

ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 199 ரன்களையும், ஸ்டிவன் ஸ்மித் 174 ரன்களையும் குவித்துள்ளனர். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொறுப்புடன் விளையாடி அதிக ரன்களை இவர்கள் விளாசுவார்கள் என தெரிகிறது. புள்ளி அட்டவனையில் ராஜஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது, இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அந்த அணியின் வலிமையை மேலும் அதிகரித்துள்ளது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி பௌலர்களாக பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால் திகழ்கிறார்கள். இவர்கள் மூவரும் இந்த சீசனில் இதுவரை எடுத்த விக்கெட்டுகள் முறையே 8, 6, 4 ஆகும். ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ஆர்ச்சர் சிறந்த எகானமிக்கல் பௌலர்களாக திகழ்கின்றனர். ஒரு ஓவரில் 7 ரன்களுக்கு மேல் இவர்களது பௌலிங்கில் ரன்கள் செல்லாது. மறுமுனையில் ஸ்டோக்ஸ் எகானமி ரேட் ஒரு ஓவருக்கு 11 ஆக உள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இதனை சரிசெய்து சிறப்பான ஆட்டத்தை ஸ்டாக்ஸ் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: அஜீன்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித்/அஸ்டன் டர்னர், ராகுல் திர்பாதி, பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கௌதம்/ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்சர், தவால் குல்கர்னி, ஸ்ரெயஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now