2019 ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் புதிய வடிவில் உருவெடுத்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், 3 முறை ஐபிஎல் சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே மைதானத்தில் மார்ச் 26 அன்று மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதுவரை இந்த சீசனில் நடந்த இரு போட்டிகளிலுமே டாஸ் வென்ற கேப்டன்கள் பௌலிங்கையே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் 4 ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை மிட்செல் மெக்லகனை வைத்து வீழ்த்தினர். பின்னர் காலின் இன்கிராம் மற்றும் ஷிகார் தவான் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். 5வதாக களமிறங்கிய ரிஷப் பண்ட் தனது மெகா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை எதிர்கொண்டு 78 ரன்களை விளாசினார். இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.
சேஸிங்கில் கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆனால் பவர் பிளேவிலேயே டெல்லி கேபிடல்ஸ் பௌலர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கீரன் பொல்லார்ட், யுவராஜ் சிங், க்ருநால் பாண்டியா ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் தேவையான ரன் ரேட்டிற்கு சமமாக ரன்களை விளாச தவறினர். இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
நாம் இங்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கான 3 காரணங்களை காண்போம்.
#1 சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் இஷான் கிசானை ஆடும் XI-ல் சேர்க்காதது
வான்கடே மைதானம் ஒரு அதிக ரன்களை குவிக்கக் கூடிய மைதானமாகும். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஜார்க்கண்ட் வீரர் இஷான் கிசான் ஆடும் XI-ல் இடம்பெறாதது மிகுந்த ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு அளித்தது. சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி 2 சதங்களை விளாசியுள்ளார். அனைவருமே இஷான் கிசான் ஆடும் XI-ல் இடம்பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் ஆடும் XI-ல் இடம்பெறவில்லை. குவின்டன் டிகாக் விக்கெட் கீப்பராகவும், நம்பர்-3 பேட்ஸ்மேனாக சூர்ய குமார் யாதவும் களமிறங்கினர். விக்கெட் கீப்பங் டிகாக் சிறப்பாக இருந்தது. ஆனால் நம்பர்-3 பேட்ஸ்மேனாக களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மோசமாக விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்த போட்டியில் தோற்றதிற்குப் பிறகு கண்டிப்பாக இஷான் கிசானை, ரோகித் சர்மா அதிகமாகவே மிஸ் செய்திருப்பார். இஷான் கிசான் ஆடும் XI-ல் இடம்பெற்றால் யுவராஜ் சிங்கிற்கு ஆடும் XI-ல் வாய்ப்பு மறுக்கப்படும். ஆனால் யுவராஜ் சிங் இந்த போட்டியில் அரைசதம் விளாசியதால் அவரை ஆடும் XI-லிருந்து நீக்க அணியின் நிர்வாகம் சுத்தமாக விரும்பாது.
#2 ராஸிக் சலாமை 19வது ஓவரில் பந்துவீச செய்தது
டெல்லி கேபிடல்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அதிரடி ரன்களை குவித்துள்ளது. ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியும் அவருக்கு சாதகமாகவே பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே பூம்ராவிற்கு கடைசி ஓவரை அளிப்பதேன முடிவு செய்திருந்தார். 19வது ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஸிக் சலாம் பந்துவீச வந்தார். இந்த ஓவர் வீசுவதற்கு முன்பு வரை 3 ஓவர்கள் வீசி தனது பௌலிங்கில் 21 ரன்களை மட்டுமே அளித்திருந்தார். ஆனால் 19 வது ஓவரில் ராஷிக் சலாம் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் 21 ரன்களை விளாசினார். இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் 200 ரன்களை கடந்தது. ரோகித் சர்மா அனுபவ வீரர் பென் கட்டிங்கை இந்த இடத்தில் பயன்படுத்திருக்கலாம். இவர் 2 ஓவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3 பவர்பிளே ஓவரை மும்பை இந்தியன்ஸ் பயன்படுத்திக் கொள்ளாதது
215 என்ற அதிக ரன் இலக்கை சேஸ் செய்யும் போது பவர்பிளே ஓவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த ஓவர்கள் அந்த அணிக்கு மிக முக்கியமான ஓவர்களாகும். ஆனால் பவர்பிளே ஓவரில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், 1 ரன்-அவுட்டையும் செய்து அசத்தினார். டி20 போட்டியில் அதிக ரன்களை சேஸிங் செய்யும் போது முதல் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தால் மீண்டும் எழுவது கடினமான விஷயமாகும். ரோகித் சர்மா, டிகாக்-உடன் இணைந்து தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரசிகர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே அதிரடி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி தந்திரமாக கையாண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணிலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் 6 ஓவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்த போதே அந்த அணி கிட்டத்தட்ட தனது ஆட்டத்தை இழந்துவிட்டது. யுவராஜ் சிங், க்ருநால் பாண்டியா, கீரன் பொல்லார்ட் ஆகியோரது பங்களிப்பினால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்கள் சற்று உயர்ந்தது. இருப்பினும் ரன்-ரேட்டை உயர்த்தும் படியாக அவர்களது ஆட்டம் இல்லை. 3முறை ஐபிஎல் சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.