ஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Shreyas Iyer vs Rohit Sharma
Shreyas Iyer vs Rohit Sharma

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2019 ஐபிஎல் தொடரின் 34வது போட்டியில் பெரோஷா கோட்லா மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் ஒன்றிற்கு ஒன்று குறைவில்லாமல் சமநிலையில் வலிமையாக திகழ்கின்றன.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கோட்லா மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 9 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன

2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் மேட்ச் 24ல் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய முதல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்டின் அதிவேக 78ன் மூலம், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 176 ரன்களில் சுருண்டு 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டெல்லி கேபிடல்ஸ்

Delhi Capitals
Delhi Capitals

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்), கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் (7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (39 ரன்கள்) ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் தனது பெரும்பான்மையை நிலைநாட்டும் என தெரிகிறது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஸ்ரெயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் முன்ரோ

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் காலின் முன்ரோ (24 பந்துகளில் 40 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர்(45 பந்துகளில் 40 ரன்கள்) ஆகியோர் துருப்பு சீட்டாக செயல்பட்டு அணியின் ரன்களை உயர்தினர். ஸ்ரெயஸ் ஐயர் இந்த சீசனில் 266 ரன்களை குவித்துள்ளார், அத்துடன் அனுபவ வீரர் ஷீகார் தவான் 256 ரன்களை குவித்துள்ளார். இவர்களுடன் பிரித்வி ஷா மும்பை பௌலர்களுக்கு நெருக்கடியை அளிப்பார் என நம்பப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ரிஷப் பண்டின் விக்கெட்டை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த நினைப்பர். ஏனெனில் இந்த சீசனின் முதல் நேருக்கு நேர் போட்டியில் அதிவேக 78 ரன்களை இவர் விளாசியது குறிப்பிடத்தக்கது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, கிறிஸ் மோரிஸ்

காகிஸோ ரபாடாவின் சீரான ஆட்டத்திறனே இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாகும். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இனிவரும் போட்டிகளிலும் இவரது ஆதிக்கம் தொடரும் என நம்பப்படுகிறது. இவருக்கு பக்கபலமாக கிறிஸ் மோரிஸ் (6 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்), கீமோ பால் (4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள்) ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முக்கியமாக இவர்கள் பவர்பிளே ஓவரில் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பார்கள்.

உத்தேச XI: பிரித்வி ஷா, ஷீகார் தவான், காலின் முன்ரோ, ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா, ஆக்ஸர் படேல், சந்தீப் லாமிச்சனே, அமித் மிஸ்ரா.

மும்பை இந்தியன்ஸ்

Mumbai Indians
Mumbai Indians

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தனது 5 வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மோதிய கடைசி 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களமிறங்க உள்ளது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, குவின்டன் டிகாக், ஹர்திக் பாண்டியா

இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குவின்டன் டிகாக் (278 ரன்கள்) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் தனது ரன்குவிப்பை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா (193 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (186 ரன்கள்), கீரன் பொல்லார்ட் (185 ரன்கள்), சூர்ய குமார் யாதவ் (183 ரன்கள்) ஆகியோர் இந்த சீசனில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இவர்களிடமிருந்து சற்று அதிரிடி ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: லாசித் மலிங்கா, ஜாஸ்பிரிட் பூம்ரா, ஹர்திக் பாண்டியா

லாசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் வலிமையாக அமைந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 31 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் இவரது அனல் பறக்கும் பந்துவீச்சு தொடரும் என தெரிகிறது. ஜாஸ்பிரிட் பூம்ரா (8 விக்கெட்டுகள்) மற்றும் ஹர்திக் பாண்டியா (7 விக்கெட்டுகள்) ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு தங்களது பௌலிங்கால் தாக்கத்தை அளிப்பார்கள் என நம்பப்படுகிறது.

உத்தேசXI: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், கீரன் பொல்லார்ட், இஷான் கிசான், ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, லாசித் மலிங்கா, ஜேஸன் பெஹாரன்ஆஃப்/மிட்செல் மெக்லகன், ராகுல் சகார், ஜாஸ்பிரிட் பூம்ரா.

Quick Links

Edited by Fambeat Tamil