2019 ஐபிஎல் தொடரின் 47-வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. மும்பை அணி இதுவரை 7 போட்டிகளில் வென்றுள்ளது. இதன் மூலம், புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுமுனையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் தோல்வியுற்று நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகையால், புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு எதிர்மாறாக, கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடம் தோல்வியுற்றது. எனவே, இவ்விரு அணிகள் இதுவரை மோதியுள்ள போட்டிகளின் புள்ளி விவரங்கள் மற்றும் எதிர்பார்த்த ஆடும் லெவனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
நேருக்கு நேர்:
இதுவரை இவ்விரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அவற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை ஐபிஎல் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருமுறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். கடந்த தொடரில் நடைபெற்ற இரு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.
எதிர்பார்த்த ஆடும் லெவன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியில் பிராத்வெயிட்ட்க்கு பதிலாக ஹாரி கர்ணி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவன் வருமாறு,
கிறிஸ் லின், சுனில் நரைன், நிதீஷ் ராணா, சுப்மான் கான், தினேஷ் கார்த்திக், ஆந்திரே ரசல், ரிங்கு சிங், பியூஸ் சாவ்லா, பிரித்திவிராஜ், ஹாரி கர்ணி, பிரசித் கிருஷ்னா.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன் மும்பை இந்தியன்ஸ்:
இன்றைய போட்டியில் மும்பை அணியில் ஒரே மாற்றமாக அனுகுல் ராய்க்கு பதிலாக மயங்க் மார்க்கண்டே இடம்பெறுவார் என தெரிகிறது. வேறு எந்த மாற்றமும் அணி நிர்வாகம் மேற்கொள்ளாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், லீவிஸ், கீரன் பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே, ராகுல் சாஹர், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரீத் பும்ரா.