ஐபிஎல் 2019: மேட்ச் 8: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI

Kane Williamson & Rahanae
Kane Williamson & Rahanae

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 8வது ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று(மார்ச் 29) நடைபெறவுள்ள. ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே இரு அணிகளும் இவ்வருட ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் நேருக்கு நேர்: இதுவரை 2 போட்டிகளில் இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

கள ரிப்போர்ட்: ராஜிவ் காந்தி மைதானம் ஒரு தட்டையான மற்றும் ஆட்டத்தை மெதுவாக எடுத்துச் செல்ல ஏற்ற மைதானம். குறிப்பாக இந்த மைதானத்தில் டி20 போட்டிகள் நடந்தால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.


ராஜஸ்தான் ராயல்ஸ்

Rajasthan royals
Rajasthan royals

ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு காரணம் அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாஸ் பட்லரை செய்த மேன்காட் ரன் அவுட் ஆகும். இந்த விக்கெட்டிற்குப் பிறகு அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே அடித்தது. தங்களது குறைகளை களைந்து ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் ராஜஸ்தான் களமிறங்கும்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், ஸ்டிவன் ஸ்மித், அஜின்க்யா ரகானே

ஜாஸ் பட்லர் 2018 ஐபிஎல் தொடரில் வெளிபடுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் வெளிபடுத்தினார். அவர் அஸ்வினிடம் மேன்கட் விக்கெட் வீழ்வதற்கு முன்னர் 43 பந்துகளை எதிர்கொண்டு 69 ரன்களை எடுத்திருந்தார். சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் இவர் களத்தில் நின்று விட்டால் பந்து பவுண்டரி & சிக்ஸர்கள் திசையில் தான் விழும்.

ஸ்டிவன் ஸ்மித் (20), அஜின்க்யா ரகானே (27), சஞ்சு சாம்சன் (30) என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் இரு தொடர் சிக்ஸர்களை விளாசினார். இதனால் இவர் ஆட்டத்தை முடித்து வைக்காமல் ஆட்டத்தை இழந்தார். எனவே இவரது சிறப்பான அதிரடி ஹைதராபாத் அணிக்கு எதிராக வெளிபடும் என தெரிகிறது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: தவால் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர்

பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் தனது 4 ஓவரில் 48 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். ஆல்-ரவுண்டரான இவர் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் இந்த குறைகளை நிவர்த்தி செய்வார்‌.

ஜோஃப்ரா ஆர்சருக்கு கடந்த போட்டியில் விக்கெட் விழவில்லை. இருப்பினும் இவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். 4ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்திருந்தார். தவால் குல்கர்னி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஒரு விக்கெட்டுகளை பஞ்சாப் அணியுடனான போட்டியில் வீழ்த்திருந்தனர். இதே ஆட்டத்திறனை ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

உத்தேச XI:

அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கௌதம், ஸ்டிவன் ஸ்மித், பென ஸ்டோக்ஸ், ஜெதேவ் உனட்கட், ஸ்ரேயஸ் கோபால், ராகுல் திர்பாதி, ஜோஃப்ரா ஆர்சர், தவால் குல்கர்னி


சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad

ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. ஹைதராபாத் அணி தனது சொந்த மண்ணில் சிறப்பான சாதனைகளை வைத்துள்ளது. எனவே ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

பேட்டிங்:

நட்சத்திர வீரர்கள்: கானே வில்லியம்சன், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்

அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாட வில்லை. 2018 ஆம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் களமிறங்குவார்.

டேவிட் வார்னர் முதல் போட்டியில் சிறப்பான அதிரடியை வெளிபடுத்தி 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்தார். அத்துடன் முதல் விக்கெட் பார்ட்னர் ஷிப்பில் 118 ரன்கள் சேர்த்தார். இவருடைய பார்டனர் ஜானி பேர்ஸ்டோவ் 35 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை எடுத்தார். மிடில் ஓவரில் 24 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்களை விளாசிய விஜய் சங்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பௌலிங்:

நட்சத்திர வீரர்கள்: ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல்

ரஷித் கான் தனது முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். சிறப்பான எகானமிக்கல் ரேட்டை வைத்திருந்த இவர் இதே பந்துவீச்சை ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்.

சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ஷகிப் அல் ஹாசன் முதல் போட்டியில் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால் ரன்களை பௌலிங்கில் அதிகமாக அளித்திருந்தனர். புவனேஸ்வர் குமார் முதலில் சிறப்பாக வீசியிருந்தாலும் டெத் ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். எனவே ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது

உத்தேச XI:

டேவிட் வார்னர், கானே வில்லியம்சன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, யுஸப் பதான், விஜய் சங்கர், தீபக் வுடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now