ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சவாய் மான் சிங் மைதானத்தில் 2019 ஐபிஎல் தொடரின் 36வது போட்டியில் இன்று மோத உள்ளன.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 21 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சவாய் மான் சிங் மைதானத்தில் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 7 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன
2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய முதல் லீக் போட்டி ஏப்ரல் 12 அன்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 89 ரன்களை விளாசி ராஜஸ்தான் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை தேடித் தந்தார்.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணி தற்போது புள்ளி அட்டவனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தடுமாறி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றிற்கு செல்ல புள்ளிகளை மும்பை அணி உயர்த்தும் என நம்பப்படுகிறது
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ரோகித் சர்மா, குவின்டன் டிகாக், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட்
ரோகித் சர்மா (223 ரன்கள்) மற்றும் குவின்டன் டிகாக் (313) ஆகியோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை மும்பை அணிக்காக வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இவர்கள் இருவரும் 96 ரன்களை பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி அசத்தினர். எனவே இன்றைய போட்டியிலும் இவர்களது அதிரடி தொடக்கத்தை நாம் எதிர்பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா (218 ரன்கள்), சூர்ய குமார் யாதவ் (208 ரன்கள்) மற்றும் கீரன் பொல்லார்ட் (186 ரன்கள்) ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை மும்பை அணிக்காக வெளிப்படுத்தி வருகின்றனர். சூர்ய குமார் யாதவ் நிலைத்து நிதானமாகவும், பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா பவர் ஹீட்டர்களாகவும் உள்ளனர். எனவே ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் இவர்களது அதிரடி தொடரும் என தெரிகிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஜாஸ்பிரிட் பூம்ரா, லாசித் மலிங்கா, ராகுல் சகார்
பூம்ரா(10 விக்கெட்டுகள்) மும்பை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் துருப்பு சீட்டாக இவர் இருப்பார். யார்கர் அரசன் லாசித் மலிங்கா மின்னல் வேக தாக்குதலை பந்துவீச்சில் அளித்து வருகிறார். இந்த சீசனில் 5 போட்டிகளில் பங்கேற்று 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே ராஜஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த இவர் திட்டமிடுவார். ராகுல் சகார் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. க்ருனால் பாண்டியா ராஜஸ்தான் அணிக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் 4 ஓவர்களை வீசி 34 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே இந்த ஆட்டத்திறன் இன்றைய போட்டியிலும் தொடரும் என தெரிகிறது.
உத்தேச XI: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா, லாசித் மலிங்கா, ராகுல் சகார், ஜெயந்த் யாதவ்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் 8 போட்டிகளில் பங்கேற்று 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி வாழ்வா-சாவா போட்டியாக ராஜஸ்தான் அணிக்கு அமைந்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் இந்த நம்பிக்கையுடன் அந்த அணி களமிறங்கும்.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், ராகுல் திர்பாதி, சஞ்சு சாம்சன்
ஜாஸ் பட்லர் (313 ரன்கள்) ராஜஸ்தான் அணியின் பேட்டிங் தூணாக திகழ்கிறார். இவரது பேட்டிங்கையே இந்த அணி முழுவதும் நம்பியுள்ளது. கடந்த போட்டியில் ராகுல் திர்பாதி தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்ததால் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் இவரது பங்களிப்பு ராஜஸ்தான் அணிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜின்க்யா ரகானே (203 ரன்கள்), சஞ்சு சாம்சன் (204 ரன்கள்) ஆகியோர் ராஜஸ்தான் அணியின் மற்ற இரு முக்கிய பேட்ஸ்மேன்களாக உள்ளனர். மும்பை அணிக்கு எதிராக இவர்களது அதிரடி ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால்
ஜோஃப்ரா ஆர்சர் (10 விக்கெட்டுகள்) மற்றும் ஸ்ரெயஸ் கோபால் ராஜஸ்தான் அணியில் சீராக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களாக உள்ளனர். எனவே இந்த இரு பௌலர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவர்பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிடுவார்கள் என தெரிகிறது. பென் ஸ்டோக்ஸ் (6 விக்கெட்டுகள்) ஆடும் XI-ல் இடம்பெற்றால் ஸ்சோதி XIலிருந்து நீக்கப்பட வேண்டும். ஜெய்தேவ் உனட்கட் மற்றும் தவால் குல்கர்னி (இருவரும் 5 விக்கெட்டுகள்) பவர்பிளே மற்றும் டெத் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அசத்துவார்கள் என நம்பப்படுகிறது.
உத்தேச XI: அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர், ராகுல் திர்பாதி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆஸ்டன் டர்னர்/ஸ்டிவன் ஸ்மித், ஸ்டுவர்ட் பின்னி, பென் ஸ்டோக்ஸ்/ஸ்சோதி, ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட்.