2019 ஐபிஎல் தொடரின் இறுதிக் கட்டம் நெருங்கிய நிலையில், ப்ளே ஆப் சுற்றுக்கு இன்னும் இரு அணிகள் முன்னேற வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் வான்கடே மைதானத்தில் மோதவிருக்கின்றன. கடைசி 3 லீக் ஆட்டங்களில் இரண்டில் தோல்வி பெற்ற மும்பை அணி, இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்க உள்ளதால் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதிக்கொள்கின்றன. ஏற்கனவே, நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை அணி சன்ரைசர்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணியாக கருதப்படும் மும்பை அணி இதுவரை நடைபெற்றுள்ள 12 லீக் ஆட்டங்களில் 7 வெற்றிகளைக் குவித்து புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 91 ரன்களை குவித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் இன்றைய போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சற்று கூடுதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஏற்கனவே, அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மட்டும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் உலகக் கோப்பை தொடர் முன்னேற்பாடுகளால், தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பினர். இதனால், ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பினால் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியை உறுதி செய்ய முடியும். தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள நிலவரம்:
விளையாடிய மொத்த ஆட்டங்கள் - 70
முதலாவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றவை - 35 போட்டிகள்
இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றவை - 35 போட்டிகள்
முதலாவது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் - 166
இரண்டாவது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் - 154
இதுவரை பதிவாகியுள்ள அதிகபட்ச ஸ்கோர் - 235 / 1 (மும்பை - பெங்களூரு)
இதுவரை பதிவாகியுள்ள குறைந்தபட்ச ஸ்கோர் - 67 / 10 (மும்பை - கொல்கத்தா )
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
மொத்த போட்டிகள் - 13
மும்பை அணி - 6 வெற்றிகள்
ஹைதராபாத் அணி - 7 வெற்றிகள்
வான்கடே மைதானத்தில் மோதிய போட்டிகள்:
மொத்தம் - 4 போட்டிகள்
மும்பை இந்தியன்ஸ் - 3 வெற்றிகள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 1 வெற்றி
இன்றைய போட்டியில் நிகழும் மாற்றங்கள்:
மும்பை இந்தியன்ஸ்:
எவின் லீவிஸ் கழற்றிவிடப்பட்டு அவருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் சேர்க்கப்படுவார்.
பரிந்தர் சரணுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கடந்த ஆட்டத்திற்கு பிறகு தொடரிலிருந்து வெளியேறிய டேவிட் வார்னருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில் இடம் பெறுவார்.
முக்கிய வீரர்கள்:
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா
ஹர்திக் பாண்டியா
லசித் மலிங்கா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மணிஷ் பாண்டே
ரஷீத் கான்
புவனேஸ்வர் குமார்
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா, குயின்டன் டி காக், எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருநால் பாண்டியா, பரிந்தர் சரண், லசித் மலிங்கா, ராகுல் சாகர் மற்றும் பும்ரா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மார்ட்டின் கப்தில், விருத்திமான் சஹா, வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், தீபக் ஹூடா, முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது மற்றும் சந்தீப் சர்மா.