2019 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி மற்றும் சென்னை அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, அணிகள் தலா 10 புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களை பிடிப்பதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி உண்டாகி உள்ளது. இன்னும் சில லீக் சுற்றுப் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு அணிகளுக்கும் ப்ளே ஆப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து காண்போம்.
#1. மும்பை இந்தியன்ஸ்:
நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆவது வெற்றி பெற வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மட்டுமன்றி, புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனில், மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ரன்ரேட்டை வைத்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால், இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல்- இல் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஹைதராபாத் அணி, இந்த 2019 சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்பொழுது ஹைதராபாத் அணி, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நேரடியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும், இருந்தாலும், இரண்டு போட்டிகளில் வென்றால் கூட, நல்ல ரன் ரேட்(+0.56) வைத்துள்ளதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஜானி பேர்ஸ்டோ, ஏற்கனவே உலகக்கோப்பை காரணமாக இங்கிலாந்து சென்றுவிட்ட நிலையில், வார்னரும் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் பங்கேற்றுவிட்டு செல்ல உள்ளதால் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.
#3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தொடர்ந்து ஆறு தோல்விகளை சந்தித்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ப்ளே ஆப்சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, கொல்கத்தா அணி. இருப்பினும், சில முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். ஏனெனில், இந்த அணி இரண்டு போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகளுக்கு மேல் பெற இயலாது. தற்பொழுது கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
#4. கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் அணி, அதற்குப்பின் அடைந்த சில தோல்விகளால் சரிவை சந்தித்தது. பஞ்சாப் அணி கடைசியில் விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் ஆவது வெற்றி பெற வேண்டும்.
இருப்பினும் சில முடிவுகள் பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். பஞ்சாப் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது, ஏனெனில், இந்த அணி ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். ஆட்டத்தை சிறப்பான முறையில் முடிப்பதற்கு இயலாமல் இருப்பதும், இறுதி ஓவர்களில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தாமல் இருப்பதுமே பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக உள்ளன.கேப்டன் எடுக்கும் சில முடிவுகளும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
#5. ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 12 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மிகவும் குறைந்த ரன்ரேட் வைத்துள்ளதால், அடுத்த சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் அணி, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற வெளிநாட்டு வீரர்கள் சென்றுவிட்டதால், ராஜஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அடுத்த சுற்றுக்கு செல்ல இரண்டு போட்டிகளிலும் வென்றாலும், ராஜஸ்தான் அணி பிற போட்டிகளின் முடிவை எதிர்பார்த்து இருக்கவேண்டிய நிலையில் உள்ளது.ராஜஸ்தான் அணி, பெங்களூரு மற்றும் டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
#6. ராயல் சேலஞ்சர் பெங்களூர்:
நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் பெங்களூரு அணி, ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. ஒரே வாய்ப்பாக, பல முடிவுகள் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமைந்தால் மூன்று அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தாலும், பெங்களூர் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும், ஏனெனில், பெங்களூர் அணி மிகவும் குறைந்த ரன் ரேட் (-0.69) வைத்துள்ளது.
பஞ்சாப் அணியை போலவே, ஆட்டத்தை சிறப்பாக முடிக்க இயலாமல் இருப்பதும், மோசமான பந்துவீச்சும், கேப்டனின் சில தவறான முடிவுகளும், பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. "ஏ சாலா கப் நம்தே" , எனும் ஆர் சி பி அணியின் மந்திரம் இம்முறையும் பயனற்று போனது.