#3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தொடர்ந்து ஆறு தோல்விகளை சந்தித்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ப்ளே ஆப்சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, கொல்கத்தா அணி. இருப்பினும், சில முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். ஏனெனில், இந்த அணி இரண்டு போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகளுக்கு மேல் பெற இயலாது. தற்பொழுது கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
#4. கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் அணி, அதற்குப்பின் அடைந்த சில தோல்விகளால் சரிவை சந்தித்தது. பஞ்சாப் அணி கடைசியில் விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் ஆவது வெற்றி பெற வேண்டும்.
இருப்பினும் சில முடிவுகள் பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். பஞ்சாப் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது, ஏனெனில், இந்த அணி ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். ஆட்டத்தை சிறப்பான முறையில் முடிப்பதற்கு இயலாமல் இருப்பதும், இறுதி ஓவர்களில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தாமல் இருப்பதுமே பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக உள்ளன.கேப்டன் எடுக்கும் சில முடிவுகளும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.