#5. ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 12 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மிகவும் குறைந்த ரன்ரேட் வைத்துள்ளதால், அடுத்த சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் அணி, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற வெளிநாட்டு வீரர்கள் சென்றுவிட்டதால், ராஜஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அடுத்த சுற்றுக்கு செல்ல இரண்டு போட்டிகளிலும் வென்றாலும், ராஜஸ்தான் அணி பிற போட்டிகளின் முடிவை எதிர்பார்த்து இருக்கவேண்டிய நிலையில் உள்ளது.ராஜஸ்தான் அணி, பெங்களூரு மற்றும் டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
#6. ராயல் சேலஞ்சர் பெங்களூர்:
நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் பெங்களூரு அணி, ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. ஒரே வாய்ப்பாக, பல முடிவுகள் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமைந்தால் மூன்று அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தாலும், பெங்களூர் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும், ஏனெனில், பெங்களூர் அணி மிகவும் குறைந்த ரன் ரேட் (-0.69) வைத்துள்ளது.
பஞ்சாப் அணியை போலவே, ஆட்டத்தை சிறப்பாக முடிக்க இயலாமல் இருப்பதும், மோசமான பந்துவீச்சும், கேப்டனின் சில தவறான முடிவுகளும், பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. "ஏ சாலா கப் நம்தே" , எனும் ஆர் சி பி அணியின் மந்திரம் இம்முறையும் பயனற்று போனது.