நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் இதுவரை பதிவாகாத சாதனை அரங்கேறி உள்ளது 

KXIP vs DC (picture courtesy: BCCI/iplt20.com)
KXIP vs DC (picture courtesy: BCCI/iplt20.com)

2019 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று தொடங்க உள்ளது. இதன்படி, புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்துவிட முடியும் என்ற நிலையில் இருந்தது, கொல்கத்தா அணி. ஆனால், ஆட்ட முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், கொல்கத்தா அணியை காட்டிலும் சிறந்த ரன் ரேட்டை வைத்திருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக 12 புள்ளிகளைக் கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

புள்ளி பட்டியல் கூறும் கதை:

points table ipl 2019
points table ipl 2019

நடப்பு ஐபிஎல் தொடரில் மற்ற சீசன்களை காட்டிலும் தனிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், நிகர ரன் ரேட் காரணங்களால் புள்ளி பட்டியலில் முன்னும் பின்னுமாக அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, தலா 8 வெற்றிகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவற்றில், மும்பை இந்தியன்ஸ் சற்று கூடுதல் ரன் ரேட்டுடன் காணப்பட்டதால், முதல் இடத்திற்கு முன்னேறியது. மேலும், மற்ற மூன்று அணிகளான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவை தலா 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளை கைப்பற்றின.

இருப்பினும், சற்று கூடுதல் நிகர ரன் ரேட்டை ஹைதராபாத் அணி கொண்டுள்ளதால் பிளே ஆஃப் அதிர்ஷ்டம் இந்த அணிக்கு அடித்தது. தொடரில் விளையாடிய இந்த 6 அணிகள் போக மற்ற இரு அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முறையே ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளும் தலா பதினொரு புள்ளிகளை கொண்டுள்ளன.

#1.முதல் மூன்று அணிகள்:

புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் அங்கம் வகிக்கும் அணிகள் தலா 18 வெற்றி புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த மூன்று அணிகளுக்கும் இதற்கு அடுத்துள்ள மூன்று அணிகளுக்கும் இடையே ஆறு வெற்றி புள்ளிகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் அணியான டெல்லி அணியின் நிகர ரன் ரேட் மற்ற இரு அணிகளை காட்டிலும் குறைவாக இருந்தமையால், புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

#2.அடுத்த மூன்று அணிகள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன. இவை அனைத்தும் தலா ஆறு வெற்றிகளை கொண்டுள்ளது. மற்ற அணிகளைக் காட்டிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கூடுதல் ரன் ரேட் இருந்தது. இதனால், அடுத்த சுற்றுக்கு இந்த அணி எளிதாக நுழைந்தது.

#3.மீதமுள்ள இரு அணிகள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களுக்கு தள்ளப்பட்டன. ஏனெனில், இந்த இரு அணிகளுக்கும் தலா ஐந்து வெற்றிகளும் ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனதால் 11 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆட்டத்தின் கடைசி பந்தை நடுவரால் கவனிக்கப்பட்டு நோபாலாக அறிவித்திருந்தால், பெங்களூர் அணி கூடுதலாக ஒரு வெற்றியைப் பெற்றிருக்கும். அப்படி இல்லை என்றாலும் மழை வந்து குறுக்கிடாமல் இருந்தால், ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும். ஒருவேளை இந்த அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் பதிமூன்று புள்ளிகளோடு நான்காம் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.

Quick Links