2019 ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. மற்றொரு முனையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழைய கடும் போட்டி இடுகின்றனர். எனவே, இந்த நான்கு அணிகளுக்கும் அவற்றுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்திருந்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று நடக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். ஒருவேளை இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியுற்றால் டெல்லி அணியிடம் ராஜஸ்தான் தோற்க வேண்டும். மற்றொரு லீக் போட்டியான மும்பை அணியிடம் கொல்கத்தா தோற்க வேண்டும். இந்த இரு மாற்றங்களும் ஏற்பட்டால், ஹைதராபாத் அணி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
#2.கொல்கத்தா அணி:
தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி, பின்னர் வந்த இரு போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் தொடர்ந்து நீடிக்கிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணியிடம் ஹைதராபாத் தோற்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தனது கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கொல்கத்தா வெற்றி பெற வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால், கொல்கத்தா அணி ஹைதராபாத்தை விட கூடுதல் நிகர ரன் ரேட் பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைக்கும்.
#3.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
இனி வரும் தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் ஒரு வெற்றியை கூட இனி வரும் போட்டிகளில் பெறக்கூடாது. இவ்வாறு நிகழ்ந்தால், ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
#4.கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் தலா 100 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு அடி எடுத்து வைக்கும்.