ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 45-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணியில் உலகக் கோப்பை முன்னேற்பாடுகள் இங்கிலாந்து அணிக்கு திரும்பிய சோப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே கேப்டன் கனே வில்லியம்சனின் விக்கெட்டை இழந்தது. பின்னர், களம் புகுந்த பாண்டே மீண்டும் ஒரு முறை சதம் அடித்து, அணி 160 என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். பின்னர், பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 9.1 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தது. ஆட்ட முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை தோற்கடித்தது. இதன் பின்னர் புள்ளி பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டது.
புள்ளி பட்டியல்:
ஐதராபாத் அணியை ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் முதலாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணியை பின்தள்ளி ஆறாம் இடத்திற்கு முன்னேறியது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 5 வெற்றிகளை குவித்து இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளி பட்டியல் மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து நான்காமிடத்தில் வகிக்கிறது. இந்த அணியின் நிகர ரன் ரேட் 0.559 என்று சிறப்பானதாக உள்ளது.
ஆரஞ்சு நிற தொப்பி:
தொடர்ந்து ஆரஞ்சு நிற தொப்பியை சீசன் முழுவதும் தன்வசம் வைத்து வருகிறார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர். நடப்பு தொடரில் வேறு எந்த பேட்ஸ்மேனும் இதுவரை 450 ரன்களை கூட தாண்டவில்லை. ஆனால், டேவிட் வார்னர் விளையாடிய 11 போட்டிகளில் 611 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் மூன்றாவது முறையாக 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு திரும்பிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ, தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ராஜஸ்தான் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரஹானே 12 போட்டிகளில் 391 ரன்கள் குவித்து முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார். அதேபோல், ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 14 போட்டிகளில் விளையாடி 319 ரன்கள் குவித்து 14 ஆம் இடத்தில் உள்ளார்.
ஊதா நிற தொப்பி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் அந்த அணியில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரருமான ஸ்ரேயாஸ் கோபால், நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 15 விக்கெட்களை கைப்பற்றி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு பந்துவீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட், 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் 20வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்து உள்ளார். ஊதா நிற தொப்பியை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா 23 விக்கெட்களை வீழ்த்தி தன்வசம் வைத்துள்ளார்.