ஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

Kane Williamson vs Shreyas Iyer
Kane Williamson vs Shreyas Iyer

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மேட்ச் 30ல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மோத உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 13 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜுவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 4 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் டெல்லி கேபிடல்ஸ் 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முந்தைய நேருக்கு நேர்: இந்த வருட ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஏப்ரல் 4 அன்று மோதின. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 129 ரன்களில் சுருட்டியது. ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய மும்பை (40 ரன்கள்) மற்றும் பஞ்சாப்(6 விக்கெட்டுகள்) அணிகளுக்கு இடையேயான போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப ஹைதராபாத் முயற்சிக்கும் என தெரிகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர், விஜய் சங்கர்

டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இவர்கள் முதல் 6 போட்டிகளில் அடித்த ரன்கள் முறையே 349 மற்றும் 263 ஆகும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும்பாலும் பேட்டிங்கில் இவர்கள் இருவரையே பெரிதும் நம்பியுள்ளது. இருவரும் கைகோர்த்து நிலைத்து விளையாட ஆரம்பித்தால் பெரிய ரன்களை விளாசுவார்கள். மனிஷ் பாண்டே மற்றும் யுசப் பதான் ஆகியோர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தவில்லை. எனவே இன்றைய போட்டியில் இவர்களை கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளது.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: சந்தீப் சர்மா, முகமது நபி, ரஷீத் கான்

சந்தீப் சர்மா ஹைதராபாத் அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நபி 7 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 5 விக்கெட்டுகளையும் இந்த சீசனில் வீழ்த்தியுள்ளனர். இந்த ஆட்டத்திறனை டெல்லி அணிக்கு எதிராகவும் தொடருவார்கள் என தெரிகிறது.

உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹேடா, யுசப் பதான், ரஷீத் கான், சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல்.

டெல்லி கேபிடல்ஸ்

Delhi Capitals
Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( 4 விக்கெட்டுகள்) மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் (7 விக்கெட்டுகள்) அணிகளுக்கு இடையேயான கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நம்பிக்கையுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் களமிறங்கும் என தெரிகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: ஷீகார் தவான், ஸ்ரெயஸ் ஐயர், ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட், பிரித்வி ஷா மற்றும் ஸ்ரெயஸ் ஐயர் ஆகியோர் இந்த சீசனில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சீசனில் இவர்கள் இதுவரை அடித்த ரன்கள் முறையே 222, 183 மற்றும் 221 ஆகும். எனவே இந்த மூவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை தனது பேட்டிங்கில் அளிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஷீகார் தவான் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, கிறிஸ் மோரிஸ் மற்றும் சந்தீப் லாமிச்சனே

காகிஸோ ரபாடா இந்த சீசனில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் மோரிஸ் 8 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார். இவர்கள் இருவரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தனது பௌலிங்கில் அளிப்பார்கள் என தெரிகிறது. இஷாந்த் சர்மா மற்றும் சந்தீப் லாமிச்சனே தலா 5 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழத்தியுள்ளனர். இனி வரும் போட்டிகளிலும் இவர்களது சிறப்பான பேட்டிங் தொடரும் என நம்பப்படுகிறது.

உத்தேச XI: ஷீகார் தவான், பிரித்வி ஷா, ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், சந்தீப் லாமிச்சனே, ராகுல் டிவெத்திய/அமித் சர்மா, காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா.

Quick Links

Edited by Fambeat Tamil