2019 ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. நடப்பு தொடரில் புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது, மும்பை இந்தியன்ஸ். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 4 வெற்றிகளை பெற்று ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற 9 போட்டிகளில் மும்பை அணி 5இல் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி. இதுவரை இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதி உள்ள போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு புள்ளி விவரங்களைப் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
210 / 6 - கடந்தாண்டு நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை அணி 210 / 6 என்னும் ஸ்கோரை குவித்ததே இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் குவித்த அதிகபட்ச ரன்களாகும்.
108 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
398 - கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 398 ரன்களைக் குவித்து குவித்து முதலிடத்திலுள்ளார்.
109 - 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் ரோஹித் சர்மா 109 ரன்கள் குவித்ததே ஒரு போட்டியின் தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
15 - இவ்விரு அணிகளுக்கும் போட்டிகளில் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் இதுவரை 15 அரைச்சதங்களை அடித்துள்ளனர்.
2 - கொல்கத்தா அணியின் கௌதம் கம்பீர், ஜாக்ஸ் காலிஸ் மற்றும் மும்பை அணியின் ரோகித் சர்மா ஆகியோர் தலா அரைசதங்களை இந்த ஆடுகளத்தில் பதிவு செய்துள்ளனர்.
108 - இவ்விரு அணிகளுக்கான போட்டியில் இதுவரை 108 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
15 - இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் ரோஹித் சர்மா 15 சிக்சர்களை அடித்தது தனிநபர் அதிகபட்ச சிக்சர்கள் ஆகும்.
42 - இவ்விரு அணிகளுக்கான போட்டிகளில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 42 பவுண்டரிகளை அடித்துள்ளார். மேலும், இதுவே தனிநபர் அதிகபட்ச பவுண்டரிகளின் சாதனையாகும்.
பௌலிங் சாதனைகள்:
5 - மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், இதுவே அதிகபட்ச விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் சாதனையாகும்.
3 / 14 - 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வீரர் சனத் ஜெயசூர்யா 14 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதுவே ஒரு போட்டியின் சிறந்த பந்து வீச்சாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹா இரு பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்திருக்கிறார்.
பீல்டிங் சாதனைகள்:
மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 4 கேட்ச்களை பிடித்து அதிகபட்ச கேட்ச்களை பிடித்தவர்கள் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளனர் வைத்துள்ளனர்.