நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் மும்பை அணி 7 முறை வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தா அணி இதுவரை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் ஒரே ஒருமுறைதான் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இம்மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
181 / 4 - கடந்த ஆண்டு மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி களில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
67 / 10 - 2008ஆம் ஆண்டு கொல்கத்தா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்து இருந்தது. இதுவே, இந்த மைதானத்தில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோராகும்.
147 - கொல்கத்தா அணியின் வீரர் கௌதம் கம்பீர் 147 ரன்களை குவித்துள்ளார். இதுவே, இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாகும்.
81* - 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவின் மணிஷ் பாண்டே 81 ரன்கள் ஆட்டமிழக்காமல் குவித்தார். எனவே, இதுவே தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
11 - இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இதுவரை 11 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
70 - இம்மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் 70 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
8 - மும்பை வீரர் பொல்லார்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிகளில் எட்டு சிக்சர்களை அடித்தது தனிநபர் அதிகபட்ச சிக்சர்களாகும்.
18 - கொல்கத்தா அணியின் கவுதம் கம்பீர் இதுவரை 18 பவுண்டரிகளை அடித்து உள்ளார்.
பவுலிங் சாதனைகள்:
10 - கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளை சாய்த்ததே, இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் ஆவார்.
4 / 15 - 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி சுனில் நரைன் சாதனை படைத்தார். இது இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட சிறந்த பந்து வீச்சாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்:
மும்பை அணியின் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் தலா 5 கேட்ச்களை பிடித்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட சிறந்த பீல்டிங் பட்டியலில் முன்னிலை வைக்கின்றனர்.