2019 ஐபிஎல் தொடரில் 51வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 4 போட்டிகளில் மூன்று வெற்றிகளை குவித்துள்ளது, மும்பை இந்தியன்ஸ். நான்கு முறை மோதிய போட்டிகளில் நான்காவது முறைதான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பெற்றிருந்தது. மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் மும்பை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒருவர் மட்டுமே ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் ஆவார். ப்ளே ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைக்கும் நோக்கில் இவ்விரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண இருக்கின்றன.
எனவே, இன்றைய போட்டியின் வெற்றி ப்ளே ஆஃப் சுற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் மும்பை அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கும். எனவே, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
184 / 3 - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கான போட்டிகளில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதுவே, ஓர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
87 / 10 - கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணி 87 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. மேலும், இதுவே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
154 - இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஹைதராபாத் வீரர் ஷிகர் தவான் 154 ரன்களை குவித்தது தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
66* - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மும்பை வீரர் பொல்லார்டு 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததே ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
3 - இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 3 முறை அரைசதம் கடந்து உள்ளனர்.
32 - இதுவரை இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் 32 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
11 - மும்பை அணி வீரர் பொல்லார்டு இதுவரை 11 சிக்சர்களை அடித்துள்ளார். இது தனிநபர் அதிகபட்ச சிக்சர்கள் ஆகும்.
19 - ஹைதராபாத் அணி வீரர் தவான் 19 பவுண்டரிகளை அடித்து அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களில் முன்னிலை வகிக்கிறார்.
பந்துவீச்சு சாதனைகள்:
7 - மும்பை அணி வீரர் லசித் மலிங்கா ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளில் 7 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.
4 / 23 - 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பையின் லசித் மலிங்கா, 23 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சாக இம்மைதானத்தில் இதுவரை உள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
மும்பை அணி வீரர் இஷான் கிஷன் மற்றும் பார்த்தீவ் பட்டேல் (மும்பை - 2 மற்றும் ஹைதராபாத் - 10) ஆகியோர் தலா மூன்று முறை தமது விக்கெட் கீப்பிங்கால் எதிரணி வீரர்களை மும்பை மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
ஃபீல்டிங் சாதனைகள்:
மும்பை மற்றும் ஹைதராபாத் அணியின் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் கீரன் பொல்லார்டு ஆகியோர் தலா நான்கு கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்களை பிடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர்.