சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் 2019 ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ஏப்ரல் 21 அன்று மோத உள்ளன. கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 16 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 10 போட்டிகளிலும், ஹைதராபாத் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜீவ்காந்தி மைதானத்தில் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 5 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய முதல் லீக் போட்டி ஏப்ரல் 24 அன்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னரின் அதிரிடியால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆன்ரிவ் ரஸலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் வெற்றி பெற்றது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2019 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. தற்போது புள்ளிபட்டியலில் கீழே உள்ள ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி முன்னேற முயற்சிக்கும்.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கானே வில்லியம்சன்
டேவிட் வார்னர் (450 ரன்கள்) இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஹைதராபாத் அணியின் 2வது சிறந்த பேட்ஸ்மேனாக ஜானி பேர்ஸ்டோவ் உள்ளார். இந்த அணி பெரும்பாலும் இவர்களது பேட்டிங்கையே நம்பியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களிற்குப் பிறகு மூன்று இலக்க ரன்களை இந்த சீசனில் எடுத்தவர் விஜய் சங்கர் (139 ரன்கள்). டாப் ஆர்டர் சொதப்பினால் இவரது பேட்டிங் அந்த அணிக்கு மிக முக்கியமானது ஆகும். அத்துடன் கேப்டன் கானே வில்லியம்சனின் சிறப்பான அதிரடியை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார், ரஷுத் கான்
ரஷீத்கான் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோரது பௌலிங் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சீராக உள்ளது. இருவரும் இதுவரை விளையாடிய போட்டிகளில் தலா 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எதிரணியின் ரன் ரேட்டை குறைக்க மிடில் ஓவரில் கானே வில்லியம்சன் இவர்களை சரியாக பயன்படுத்துகிறார். இவர்களை தவிர கலீல் அகமது மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை பவர்பிளே மற்றும் டெத் ஓவரில் கேப்டன் பயன்படுத்துவார்.
உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், அபிஷேக் சர்மா,யுஸப் பதான், ஷபாஜ் நதீம், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், கலீல் அகமது.
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்
புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையிலான கடந்த 4 போட்டிகளில் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது புள்ளி அட்டவனையில் கீழிடத்தில் உள்ளது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: நிதிஷ் ராணா, கிறிஸ் லின், ஆன்ரிவ் ரஸல்
பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் நிதிஷ் ராணா (286) மற்றும் ஆன்ரிவ் ரஸல் (377) ஆகியோர் சிறப்பாக பவர் ஹீட்டிங் ஷாட்களை விளாசித் தள்ளினர். இருப்பினும் இவர்களது ஆட்டம் அந்த போட்டியில் வீண் ஆனது. இருவரும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் துனை இவர்களுக்கு சிறிது வேண்டும்.
கிறிஸ் லின் (213 ரன்கள்) மற்றும் ராபி உத்தப்பா (220 ரன்கள்) ஆகியோர் தொடக்க லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினர். ஆனால் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மிகவும் தடுமாறினர். எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவர்களது பங்களிப்பை பேட்டிங்கில் எதிர்பார்க்கிறது அணி நிர்வாகம்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ப்யுஸ் சாவ்லா, சுனில் நரைன், குல்தீப் யாதவ்
ஆன்ரிவ் ரஸல் (7 விக்கெட்டுகள்), சுனில் நரைன் (6 விக்கெட்டுகள்), ப்யுஸ் சாவ்லா (6 விக்கெட்டுகள்) ஆகியோர் கொல்கத்தா அணியின் பௌலிங் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். பவர்பிளேவில் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த இவர்கள் முயல்வர்.
ஹாரி குர்னே கொல்கத்தா அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர். இவர் 4 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களுள் இவரும் ஒருவராவார்.
உத்தேச XI: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபி உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆன்ரிவ் ரஸல், சுப்மன் கில், ப்யுஸ் சாவ்லா, பிரஸித் கிருஷ்ணா, ஹாரி குர்னே, குல்தீப் யாதவ்.