2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு மோதவுள்ளன.
கடந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தையும், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 3வது இடத்தையும் பிடித்தன. கடந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் தலா ஒரு போட்டிகளில் இரு அணியும் வெற்றி பெற்றன. அத்துடன் 2வது அரையிறுதியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 15 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 9 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும் வென்றுள்ளன.
நாம் இங்கு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI பற்றி காண்போம்.
அணி விவரம்:
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்:
சுனில் நரைன், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆன்ரிவ் ரஸல், நிதிஷ் ராணா, சுப்மன் கில், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா, ராபின் உத்தப்பா, ரின்கு சிங், சந்தீப் வாரியர், கே.சி.கரியப்பா, நிக்கில் நாயக், ஜோ டென்லி, ஶ்ரீகாந்த் முந்தே, ஹாரி குர்னே , லாக்கி பெர்குசன், யாரா பிரித்விராஜ், கர்லஸ் பிராத்வெய்ட், பிரஸித் கிருஷ்ணா
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர், கானே வில்லியம்சன், விருத்திமான் சாகா, புவனேஸ்வர் குமார், ரஷித் கான், தீபக் ஹாடா, ரிக்கி பூய், மனிஷ் பாண்டே, யுஸாப் பதான், பில்லி ஸ்டேன்லெக், ஷகிப் அல் ஹாசன், சந்தீப் சர்மா, கலீல் அகமது, சித்தார்த் கவுல், டி நடராஜன், பாஸில் தம்பி, ஶ்ரீ வத் கௌசாமி, முகமது நபி, மார்டின் கப்தில், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷபாஜ் நதீம், ஜானி பேர்ஸ்டோவ்.
நட்சத்திர வீரர்கள்
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் - சுனில் நரைன்
சுனில் நரைன் கொல்கத்தா அணியின் ஒரு முக்கிய ஆல்-ரவுண்டர் ஆவார். கடந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 356 ரன்களையும் விளாசினார். இவரை கடந்த சில ஐபிஎல் தொடர்களில் இறக்கியது போலவே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவார்களா என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ரஷித் கான்
தற்போதைய நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் திகழ்கிறார். 2018 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் பங்கேற்று 6.68 எகானமி ரேட்டுடன் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே ஆட்டத்திறனை 2019 ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்துவார் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அத்துடன் ரஷித் கான் சுழற்பந்து வீச்சை எவ்வாறு கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் சந்திக்கிறார்கள் என்பதை காணவும் ஆவலுடன் உள்ளனர்.
உத்தேச XI:
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்: கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுனில் நரைன், சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், பிரஸித் கிருஷ்ணா.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், ரித்திமான் சாகா, மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், யுஸப் பதான், தீபக் ஹாடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், பில்லி ஸ்டேன்லெக், சித்தார்த் கவுல்.