அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட்டத்தை மாற்றும் திறனை ஆல்-ரவுண்டர்களே பெற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றிலும் கடந்த காலங்களில் ஆல்-ரவுண்டர்களே ஒரு அணியின் வெற்றிக்கு மிகுந்த காரணமாக இருந்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்றுள்ளன. இந்த அணிகள் ஆதிக்கத்திற்கு பெரிதும் ஆல்-ரவுண்டர்களே காரணமாக இருந்துள்ளனர். மேற்கண்ட அணிகளில் டுவைன் பிரவோ, ஆன்ரிவ் ரஸல், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், அல்பி மோர்கல், ஜெகாஸ் காலீஸ் ஆகியோர் அவரவர் விளையாடும் அணிகளுக்கு நட்சத்திர ஆல்-ரவுண்டர்களாக வலம் வந்துள்ளனர்.
2019 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளில் மிகவும் வலிமையான வீரர்கள் ஆடும் XI-ல் இடம்பெற்றிருந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் சிறந்த பேட்டிங் இருந்தாலும், சிறப்பான ஆல்-ரவுண்டர்கள் இல்லாத காரணத்தால் மிகவும் தடுமாறி வந்தது நாம் இந்த ஐபிஎல் சீசனில் பார்த்துள்ளோம்.
நாம் இங்கு 2019 ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்திய டாப் 3 ஆல்-ரவுண்டர்களை பற்றி காண்போம்.
#3. ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)-15 விக்கெட்டுகள்
இந்த பட்டியலில் ஜடேஜா சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தாமல் இருந்தாலும், ஜடேஜா வீழ்த்திய விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான சூழ்நிலையில் ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவ்வருட ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் ஏற்றதாக இருந்தது. இந்த மைதானத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜா இனைந்து எதிரணியினை குறைந்த இலக்கில் வீழ்தினார்கள். சென்னை அணியின் சார்பாக இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இறுதிப் போட்டி வரை சென்னை அணியை அழைத்தும் சென்றார்.
#2 ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 402 ரன்கள் மற்றும் 14 விக்கெட்டுகள்
இரண்டு மாதங்கள் நடந்த 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஹீட்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்களை சிறப்பாக உயர்த்துவார்.
பௌலிங்கில் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் லாசித் மலிங்கா ஆகியோருக்கு ஹர்திக் பாண்டியா துனைநின்று சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். 2019 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா 16 போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#1 ஆன்ரிவ் ரஸல் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்) - 510 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள்
ஆன்ரிவ் ரஸலிற்கு இவ்வருட ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக ரஸல் பேட்டிங்கில் சிறப்பான ஆதிக்கத்தை மேற்கொண்டார். ஆன்ரிவ் ரஸல் 2019 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் 204.82 என்ற பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 500க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார். இவரது சீரான ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு லீக் சுற்று முடியும் வரை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருந்தது.
ரஸலுக்கு இவ்வருட ஐபிஎல் சீசனில் பௌலிங் சிறப்பாக இல்லை. இருப்பினும் சில முக்கிய விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழத்தியுள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று 510 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இவ்வருட ஐபிஎல் தொடரின் சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார்.