வெற்றி பாதைக்கு திரும்பிய டெல்லி கேபிடல்ஸ் அணி

Pravin
ஷிகார் தவண் மற்றும் பன்ட்
ஷிகார் தவண் மற்றும் பன்ட்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சொந்த மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணி உடன் மோதியது. இந்த இரு அணிகளும் எற்கனவே நடப்பு சீசனில் டெல்லியில் நடந்த லீக் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மூன்று மாற்றங்களுடன் விளையாடியது.

இந்த போட்டியில் டென்லி, ப்ராத்வெய்ட், பெர்குசன் மூவரும் விளையாடினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் டென்லி மற்றும் சுக்மான் கில் இருவரும் களம் இறங்கினர்.

இந்த ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர் டென்லி போட்டியின் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இஷாந்த் சர்மா முதல் பந்திலேயே சிறப்பான பந்து வீச்சின் மூலம் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்தாக களம் இறங்கிய ராபின் உத்தப்பா நிலைத்து விளையாடினார்.

சுக்மான் கில்
சுக்மான் கில்

இந்த சீசனில் முதன் முறையாக தொடக்கத்தில் களம் இறங்கிய சுக்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். உத்தப்பா 28 ரன்னில் ராபாடாவின் வேகத்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அடுத்தாக களம் இறங்கிய ராணா 11 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆக அடுத்தாக நிலைத்து விளையாடிய சுக்மான் கிலும் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த கேப்டனும் தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் அவுட் ஆக அதிரடி வீரர் ரஸல் வந்த வேகத்தில் சிக்ஸ்ர் மழை பொழிந்தார். அதன் பின்னர் ரஸல், ப்ராத்வெயிட், அடுத்தடுத்து அவுட் ஆக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். பிரித்திவ் ஷா 14 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார்.

தவண் மற்றும் பன்ட்
தவண் மற்றும் பன்ட்

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பன்ட் மற்றும் ஷிகார் தவண் இருவரும் டெல்லி அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நிலைத்து விளையாடிய தவண் அரைசதம் வீளாசினார். மறுமுனையில் நிலைத்து விளையாடி ரிஷப் பன்ட் 46 ரன்னில் நிதிஷ் ராணா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷிகார் தவண் 97* ரன்கள் வீளாசி டெல்லி அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் தவண். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

Quick Links