ரஸல் மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் ரூத்ரதாண்டவம் அடிய ஈடன் காடன் மைதானம்

Pravin
ரஸல்
ரஸல்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 47வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் விளையாடியது கொல்கத்தா அணி. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டி கட்டயத்தில் கொல்கத்தா அணி இருந்த நிலையில் மும்பை அணி டாஸ் வென்ற முதலில் கொல்கத்தா அணியை விளையாட சொல்லியது.

இதனை அடுத்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சுக்மான் கில் மற்றும் கிறிஸ் லிண் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த ஜோடியின் ஆட்டத்தை தடுக்க முடியாமல் தடுமாறியது மும்பை அணி. முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 96 ரன்கள் குவித்தது. கிறிஸ் லிண் அரைசதம் வீளாசிய நிலையில் 54 ரன்னில் ராகுல் சஹார் சுழலில் வீழ்ந்தார்.

சுக்மான் கில்
சுக்மான் கில்

அதன் பின்னர் களம் இறங்கிய ஆன்ரே ரஸல் வழக்கத்தை விட முன்பாகவே களம் இறங்கினார். இந்த சீசன் முழுவதும் ரஸலின் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் இருந்ததால் கொல்கத்தா அணி ரன் மழை பொழிந்து கொண்டே இருந்தது. ரஸல் சிக்ஸர் மழை பொழிய ரன்வேகம் அதிகரித்தது. 18 ஓவரிலேயே 200 ரன்களை கடந்தது கொல்கத்தா அணி. ரஸல் தொடர்ந்து சிக்ஸர் வீளாச 20 ஓவர்கள் முடிவில் 232 ரன்களை குவித்தது. இதில் கில் 76 ரன்களும் ரஸல் 80* ரன்களும் வீளாசினர்.

ரஸல் மற்றும் கில்
ரஸல் மற்றும் கில்

அதன் பின்னர் மிகபெரிய ஸ்கோரை சேஸிங்க் செய்ய தொடங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஷித் சர்மா மற்றும் குயிடன் டி காக் இருவரும் களம் இறங்கினர். குயிடன் டி காக் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் கேப்டன் ரோஷித் சர்மா 12 ரன்னில் குர்னே பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து லேவிஸ் 15 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 26 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார்.

ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

மும்பை அணி 58-4 என்று தடுமாறிய நிலையில் ஜோடி சேரந்த பொலார்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் கொல்கத்தா அணியின் பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டிரியாக பறக்க விட்டனர். ஹர்டிக் பாண்டியா 17 பந்தில் அரைசதம் விளாசி எதிர் அணியை கதிகலங்க செய்தார். அதன் பின்னர் பொலார்ட் 20 ரன்னில் அவுட் ஆக தொடர்ந்து அதிரடி காட்டிய ஹர்டிக் பாண்டியா 91(34) ரன்னில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கே மாறியது. கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரஸல் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil