கொல்கத்தா அணியை கதறவிட்ட ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்

Pravin
ரீயான் பராக்
ரீயான் பராக்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 43வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் விளையாடினர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் புதியதாக ப்ராத்வெய்ட் மற்றும் ராஜஸ்தான் அணியில் ஓஷான் தாமஸ் இருவரும் விளையாடினர்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. கிறிஸ் லிண் முதல் ஓவரிலேயே வருண் ஆரோன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக களம் இறங்கிய சுக்மான் கில் 14 ரன்னில் அதே வருண் ஆரோன் பந்தில் அவுட் ஆகி அதிரச்சி அளிக்க அதன் பின்னர் வந்த நிதிஸ் ராணா 21 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆக இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிலைத்து விளையாடினார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

அதன் பின்னர் வந்த சுனில் நரைன் 11 ரன்னில் ரன்அவுட் ஆக அடுத்து வந்த அதிரடி வீரர் ரஸல் இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ரஸல் 14 ரன்னில் ஓஷான் தாமஸ் பந்தில் அவுட் ஆக நிலைத்து விளையாடிய கேப்டன் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசினார். அடுத்து வந்த ப்ராத்வெய்ட் 5 ரன்னில் அவுட் ஆகிய நிலையில் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 97 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் சாம்சன் இருவரும் சிறப்பான தொடக்கம் தந்த போதிலும் ரஹானே 32 ரன்னில் சுனில் நரைன் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 2 ரன்னில் அதே நரைன் சுழலில் சிக்கினார். சாம்சன் 22 ரன்னில் சாவ்லா பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த ரீயான் பராக் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தது. பின்னி 11 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பராக் மட்டும் சிறப்பாக விளையாடினார்.

ரீயான் பராக்
ரீயான் பராக்

கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் தேவைபட்ட நிலையில் பராக் மற்றும் ஆர்ச்சர் ஜோடி அதிரடியாக விளையாடியது. ரீயான் பராக் 47 ரன்னில் அவுட் ஆகினாலும் கொல்கத்தா அணியிடம் இந்த வெற்றி பறித்து கொண்டது ராஜஸ்தான் அணி. 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வருண் ஆரோன் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் கொல்கத்தா அணி பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு பறிபோனது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now