தொடர்ந்து ஏழாவது சீசனாக முதல் லீக் போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி 

Pravin
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12 வது சீசன் நேற்று முதல் போட்டியுடன் கோலகலமாக தொடங்கியது. இந்த நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் மூன்றாவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் மும்பை அணியில் புதியதாக யுவராஜ் சிங் மற்றும் குயிடன் டி காக் இருவரும் களம் இறங்குகின்றனர். அதே போல் டெல்லி அணியில் தவாண் முதல் முறையாக டெல்லி அணிக்காக விளையாடுகின்றனர்.

முதலில் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவாண் இருவரும் களம் இறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்திவ் ஷா 7 ரன்னில் மெக்லேனகான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சிறிது நேரம் அதிரடி காட்டினார். ஷ்ரேயஸ் ஐயர் 16 ரன்னில் மெக்லேனகான் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தவாண் மற்றும் கொலின் இங்ரம் இருவரும் நிலைத்து விளையாடினர். இவர்கள் இருவரும் 3வது விக்கெடிற்கு 73 ரன்கள் சேர்த்தனர். அதிரடி காட்டிய இங்ரம் 47 ரன்னில் கட்டிங் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட் சிக்ஸர் மழை பொழிந்தார். நிலைத்து விளையாடிய தவாண் 43 ரன்னில் ஹர்டிக் பாண்டிய பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் தனிநபராக ரிஷப் பண்ட் அதிரடி காட்டினார். 27 பந்தில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் வீளாசி 78 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 213-6 ரன்களை குவித்தது.

மும்பை அணி வீரர்களின் விக்கெட் விவரம் : மெக்லேனகான்-3, பும்ரா-1, ஹர்டிக் பாண்டியா -1, கட்டிங்-1.

இதை அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் குயிடன் டி காக் இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர். ரோஹித் சர்மா 14 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 2 ரன்னில் ரன்அவுட் ஆகினார். இதை அடுத்து குயிடன் டி காக் அதிரடிய நிலையில் 27 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட்டாக மும்பை அணி 45-3 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

அதன் பின்னர் களம் இறங்கிய கைரன் பொலார்ட் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கைரன் பொலார்ட் 21 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டிய அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய க்ரூனால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

15 பந்தில் 32 ரன்களை எடுத்து போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கட்டிங் 3 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய யுவராஜ் சிங் அரைசதம் வீளாசினார். யுவராஜ் சிங் 53 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த மெக்கலேனகான் 10 ரன்னில் திவேதியா பந்தில் அவுட் ஆகினார். மும்பை அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் 176 ரன்களை எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil