கொல்கத்தாவை விரட்டி குவாலிஃபையர் 1-க்கு தகுதியானது மும்பை அணி

Pravin
மும்பை இன்டியன்ஸ்
மும்பை இன்டியன்ஸ்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் கடைசி வார லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் 56வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் அதே போல் மும்பை அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதால் இந்த போட்டியின் மீது மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுக்மான் கில் இருவரும் களம் இறங்கினர். கடைசியாக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய சுக்மான் கில் இந்த போட்டியில் 9 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ராபின் உத்தப்பா நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் கிறிஸ் லிண். லிண் 41 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கே மாறியது. அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் தடுமாற்றத்துடன் விளையாடிய நிலையில் அவரும் 3 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார்.

ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

அடுத்து வந்த அதிரடி வீரர் ஆன்ரே ரஸல் எதிர்பாராத விதமாக டக்அவுட் ஆகினார். கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பே பறிபோனது போல் அமைந்தது. அடுத்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினார் ராபின் உத்தப்பா 47 பந்தில் 40 ரன்களை அடித்து பும்ரா பந்தில் அவுட் ஆகினார். ராணா 26 ரன்னில் அவுட் ஆக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 133 -7 என்ற மோசமான இலக்கை நிர்ணயித்தது. மும்பை இன்டியன்ஸ் அணியில் மலிங்கா -3, பும்ரா -2, ஹர்டிக் பாண்டியா -2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய மும்பை இன்டியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் பின்னர் அதிரடியாக விளையாடினார் குயிடன் டி காக். குயிடன் டி காக் 30 ரன்னில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆகினார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நிலைத்து விளையாடிய இந்த ஜோடி கடைசி வரை விக்கெட் இழக்காமல் மும்பை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார். அதே மறுமுனையில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 46 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் பிடித்தது மும்பை அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now