ஜாஸ் பட்லரின் அதிரடியில் வீழ்ந்தது மும்பை இன்டியன்ஸ் அணி

Pravin
ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. மும்பை இன்டியஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்டியஸ் அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினர்.

டி காக்
டி காக்

தொடக்கத்திலிருந்து இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடி முதல் பத்து ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை குவித்தது. நிலைத்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்தது. அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் வந்த சற்று நேரத்தில் 16 ரன்னில் குல்கர்னி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கிரன் பொலார்ட் 6 ரன்னில் அவுட் ஆக நிலைத்து விளையாடிய குயிடன் டி காக் 81 ரன்கள் குவித்து ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த ஹர்டிக் பாண்டியா 28 ரன்கள் அடிக்க மும்பை இன்டியன்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது.

ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் அஜிங்கா ரஹானே இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஹானே 37 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். பின்னர் ஆட்டத்தின் போக்கினை விறுவிறுப்பாக மாற்றினார் ஜாஸ் பட்லர். சிக்ஸர் மழை பொழிந்த ஜாஸ் பட்லர் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் வீளாசினார். ரன் மழை பொழிந்த பட்லர் அல்ஜாரி ஜோசப் வீசிய 13வது ஓவரில் 6,4,4,4,4,6 அடித்து அசத்தினார். ஜாஸ் பட்லர் 89 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார்.

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

இதை அடுத்து ஆட்டத்தின் போக்கு மாறியது. பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். நிலைத்து விளையாடிய சாம்சன் 31 ரன்னிலும், திரிபாதி 1 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆக ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 6 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷ்ரேயஸ் கோபால் பவுண்டரி அடித்து வெற்றி பெற செய்தார். ராஜஸ்தான் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now