ரிஷப் பண்ட் மற்றும் தவண் அதிரடியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Pravin
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் 40வது லீக் போட்டி ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அஜிங்கா ரஹானே இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சொதப்பியது ராஜஸ்தான் அணி. சஞ்சு சாம்சன் ஒரு பந்து கூட சந்திகாமல் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ரஹானே மற்றும் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த ஜோடியில் ரஹானே இந்த தொடரில் இதுவரை இல்லாத சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

ஸ்டிவ் ஸ்மித்
ஸ்டிவ் ஸ்மித்

அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 130 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியில் ஸ்டிவ் ஸ்மித் 50 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த டர்னர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ரஹானே சதம்
ரஹானே சதம்

இஷாந்து சர்மா வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த ஸ்டுவர்ட் பின்னி நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரஹானே ஐபிஎல் தொடர்களில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் அடித்தது.

அதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஷிகார் தவண் 25 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதன் பின்னர் ஷிகார் தவண் 54 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்னில் ரீயான் பராக் பந்தில் அவுட் ஆகினார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் பிரித்திவ் ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. நிலைத்து விளையாடிய பிரித்திவ் ஷா 42 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த ரூதர்போர்டு 11 ரன்னில் குல்கர்னீ பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து சிறப்பாக விளையாடிய பன்ட் 78 ரன்கள் குவித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now