புள்ளி பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது கொல்கத்தா அணி

Pravin
லிண் மற்றும் நரைன்
லிண் மற்றும் நரைன்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் மிகவும் பிரமாண்டமாக இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் களம் இறங்கினர்.

கேப்டன் அஜிங்கா ரஹானே ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 5 ரன்னில் பிரஜீத் கிருஷ்ணா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டிவ் ஸ்மித் ஜாஸ் பட்லருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 71 ரன்களை சேர்த்தது. நிலைத்து விளையாடிய பட்லர் அதிரடி காட்ட தொடங்கிய நிலையில் 37 ரன்னில் ஹாரி கர்னி பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

ஸ்டிவ் ஸ்மித்
ஸ்டிவ் ஸ்மித்

அதை தொடர்ந்து நிலைத்து விளையாடிய ஸ்டிவ் ஸ்மித் அரைசதம் வீளாசினார். அதன் பின்னர் வந்த திரிபாதி 6 ரன்னில் ஹாரி கர்னி பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து ராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவர்கள் முடிவில் 139-3 ரன்களை எடுத்தது. இந்த மைதானம் சுழல் பந்து வீச்சளர்களுக்கு தங்குந்ததாக அமைந்ததால் ராஜஸ்தான் அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர்.

அதை அடுத்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் ராஜஸ்தான் அணி வீரர்களின் பந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக வீளாசினர். சனில் நரைன் அதிரடியாக விளையாடிய நிலையில் 25 பந்தில் 47 ரன்களை குவித்தார். 3 ரன்கள் எடுத்தால் அரைசதம் என்ற நிலையில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார்.

கிறிஸ் லிண்
கிறிஸ் லிண்

இதை அடுத்து களம் இறங்கிய ராபின் உத்தப்பா நிலைத்து விளையாடினார். கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 105 ரன்களை குவித்தது. நிலைத்து விளையாடிய கிறிஸ் லிண் 50 ரன்னில் ஷ்ரேயஸ் கோபாலின் சுழல் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய சுக்மான் கில் நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ராபின் உத்தப்பா அதிரடி காட்டினார்.

கொல்கத்தா அணி 13.5 ஓவரில் வெற்றி இலக்கான 140 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் லிண் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links