இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 36வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். ரோஹித் சர்மா வந்த வேகத்தில் 5 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சிறப்பான பாட்னர்ஷிப் கொடுக்க 2வது விக்கெட்டிற்கு 98 ரன்கள் சேர்த்தனர்.
நிலைத்து விளையாடிய டி காக் அரைசதம் வீளாச சூரியகுமார் 34 ரன்னில் பின்னி பந்தில் அவுட் ஆக அடுத்தாக டி காக் 65 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக 23 ரன்கள் அடித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கீரன் பொலார்டு வந்த வேகத்தில் 10 ரன்னில் அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 161-5 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் சாம்சன் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்து அதிரடியாக விளையாடினார் சாம்சன். ரஹானே 12 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் நிலைத்து விளையாட சாம்சன் 19 பந்தில் 35 ரன்கள் அடித்து ராகுல் சஹாரின் சுழலில் வீழந்தார்.
அடுத்தாக வந்த பென் ஸ்டோக்ஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஸ்டிவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த இளம் இந்திய வீரர் ரீயான் பராக் சிறப்பாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டார். இந்த பாட்னர்ஷிபை பிரிக்க முடியாமல் மும்பை இன்டியன்ஸ் அணி திணறியது. நிலைத்து விளையாடிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அரைசதம் வீளாசினார். சிறப்பாக விளையாடிய பராக் 43 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அடுத்து வந்த டர்னர் டக் அவுட் ஆகினார். ஸ்மித் 59 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.