ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சில் திணறிய சன்ரைசர்ஸ் அணி

Pravin
ஸ்டிவ் ஸ்மித்
ஸ்டிவ் ஸ்மித்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் 45வது லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணி இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் இந்த போட்டி ராஜஸ்தான் அணிக்கு முக்கியமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் களம் இறங்கினர்.

வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே
வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தடுமாறிய கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னில் ஷ்ரேயஸ் கோபாலின் சுழலில் தனது விக்கெட் இழந்தார். அதன் பின்னர் வந்த மனிஷ் பாண்டே நிலைத்து விளையாட வார்னரும் பொறுமையாக விளையாடிய நிலையில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் டேவிட் வார்னர் 37 ரன்கள் சேர்த்து ஓசேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய விஜய் சங்கர் நிலைத்து விளையாட சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மனிஷ் பாண்டே அரைசதம் விளாசினார்.

உனத்கட்
உனத்கட்

தொடர்ந்து விளையாடிய மனிஷ் பாண்டே 61 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கே மாறியது. அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க ரன்னின் வேகம் அதிகரிக்கவில்லை. அடுத்து வந்த வீரர்கள் விஜய் சங்கர் (8), ஷாகிப் அல் ஹாசன் (9), ஹூடா (0), சாஹா (5), புவனேஷ்வர் குமார் (1) என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக ரஷித் கான் மட்டும் 17 ரன்கள் சேர்க்க ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஓஷேன் தாமஸ், ஷ்ரேயஸ் கோபால், வருண் ஆரோன், உனத்கட் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

லிவிங்ஸ்டன்
லிவிங்ஸ்டன்

அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. பட்லர் இல்லாத குறையை புதியதாக களம் இறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் தீர்த்து வைத்தார். அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 26 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் வந்த சாம்சன் நிலைத்து விளையாட மறுமுனையில் நிலைத்து விளையாடிய அஜிங்கா ரஹானே 39 ரன்கள் அடித்தது ஷாகிப் அல் ஹாசன் பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் சாம்சன் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த ரன்ரேட் அதிகரித்தது. ஸ்டிவ் ஸ்மித் 22 ரன்னில் அவுட் ஆக நிலைத்து விளையாடிய சாம்சன் 48 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். ராஜஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக உனத்கட் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil