கொல்கத்தா அணியை சிதறடித்த வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி

Pravin
வார்னர்
வார்னர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று சூப்பர் சன்டேவில் 38வது லீக் போட்டி ஐத்ராபாதில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் இரு அணிகளும் விளையாடினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடி ஆக விளையாடிய சுனில் நரைன் 25 ரன்னில் கலீல் அஹ்மது பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த சுக்மான் கில் 3 ரன்னில் அதே கலீல் அஹ்மது பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த நிதீஷ் ராணா கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில் இவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. நிதீஷ் ராணா 11 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

கிறிஸ் லிண்
கிறிஸ் லிண்

அதன் பின்னர் களம் இறங்கிய ரிங்கு சிங் நிலைத்து விளையாடிய கிறிஸ் லிண் உடன் இணைந்து சிறந்த பாட்னர்ஷிப் கொடுத்தார். சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 30 ரன்னில் சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆக அடுத்தாக ரஸல் களம் இறங்கினார். நிலைத்து விளையாடிய கிறிஸ் லிண் அரைசதம் வீளாசினார். கிறிஸ் லிண் 51 ரன்னில் கலீல் அஹ்மது பந்தில் அவுட் ஆகினார். அதிரடி ஆக விளையாடிய ரஸல் 15 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் அவுட் ஆக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 159-8 ரன்கள் எடுத்தது.

வார்னர் -பேர்ஸ்டோ
வார்னர் -பேர்ஸ்டோ

அதன் பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் ஜேன்னி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களம் இறங்கியது. இருவரும் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். இந்த போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி இருவரும் அரைசதம் வீளாசி அசத்தினர். இந்த ஜோடி இந்த சீசனில் மீண்டும் ஒரு 100+ பாட்னர்ஷிப் கொடுத்தனர். இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

நிலைத்து விளையாடிய டேவிட் வார்னர் 67 ரன்னில் பிரித்விராஜ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த கேப்டன் கேம் வில்லியம்சன் நிலைத்து விளையாட மறுமுனையில் பேர்ஸ்ரோ 80 ரன்கள் குவித்து வெற்றி பெற செய்தார். ஐத்ராபாத் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now