அல்ஜாரி என்னும் இளம் வீரரை கொண்டு ஐத்ராபாத் அணியை வீழ்த்திய மும்பை இன்டியன்ஸ் அணி

Pravin
அல்ஜாரி ஜோசப்
அல்ஜாரி ஜோசப்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி ஐத்ராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஷித் சர்மா இருவரும் களம் இறங்கினர். மும்பை இன்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஷித் சர்மா வந்த வேகத்தில் 11 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகினார்.

அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய இஷான் கிஷன் நிலைத்து விளையாடினார். குயிடன் டி காக் 19 ரன்னில் சித்தார்த் கௌவுல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 6 ரன்னில் சித்தார்த் கௌவுல் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார். மறுமுனையில் இஷான் கிஷன் 17 ரன்னில் ரன்அவுட் ஆகினார். ஹர்டிக் பாண்டிய 14 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டிய பொலார்டு 26 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 136-7 ரன்களை எடுத்தது.

பொலார்டு
பொலார்டு

இதை அடுத்து எளிய இலக்கை எதிர் கொண்டு விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜேன்னி பேர்ஸ்ரோ இருவரும் களம் இறங்கினர். பேர்ஸ்ரோ 16 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து டேவிட் வார்னர் 15 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய விஜய் சங்கர் 5 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார்.

ஜோசப்
ஜோசப்

அதை தொடர்ந்து மனிஷ் பான்டே சிறிது நேரம் நிலைத்து நின்று 16 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக வந்த தீபக் ஹூடா 20 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து வந்த யூசுப் பதான் ராகுல் சஹார் பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ரஷித் கானும் டக் அவுட் ஆகினார். அதை அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் 2 ரன்னிலும், கௌவுல் ரன் எதுவும் எடுக்காமல் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார்.

இந்த போட்டியில் அறிமுகமான மும்பை இன்டியன்ஸ் அணி வீரர் அல்ஜாரி ஜோசப் அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோசப் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links