வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் அதிரடி ஆட்டத்தால் 199 ரன்னை சேஷிங் செய்து ஐத்ராபாத் அணி அசத்தல் வெற்றி 

Pravin
வார்னர்,பேஸ்டோவ்,ரஹானே,சாம்சன்
வார்னர்,பேஸ்டோவ்,ரஹானே,சாம்சன்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8வது லீக் போட்டி ஐத்ராபாதில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் விளையாடிய முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் ஆர்வம் காட்டினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ரஹானே மற்றும் சாம்சன்
ரஹானே மற்றும் சாம்சன்

அதன் படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் களம் இறங்கினர். அதிரடி வீரர் பட்லரின் விக்கெட்டை எடுக்க ஐத்ராபாத் அணி முனைப்பு காட்டியது. அதன் படி மூன்றாவது ஓவரில் ரஷித் கான் பந்தில் பட்லர் 5 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் ரஹானே உடன் ஜோடி சேர்ந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக அடித்து நொருகினர். இருவரின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் ஐத்ராபாத் அணி தடுமாறியது. நிலைத்து விளையாடிய ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே 70 ரன்னில் நதீம் பந்தில் அவுட் ஆகினார்.

சாம்சன்
சாம்சன்

அதன் பின்னர் களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய சாம்சன் இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை வீளாசினார். 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் வீளாசினார். நிலைத்த விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்கள் அடித்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 198 ரன்களை குவித்தது.

வார்னர்
வார்னர்

அதன் பின்னர் களம் இறங்கிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் ஆறு ஓவரிலேயே 69 ரன்களை குவித்தது இந்த ஜோடி. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர் 69 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் அவருடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய பேர்ஸ்டோவ் 45 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார்.

இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க அடுத்து வந்த வில்லியம்சன் 14 ரன்னில் உனாத்கட் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த விஜய் சங்கர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 15 பந்தில் 35 ரன்கள் வீளாசி ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த மனிஷ் பாண்டே 1 ரன்னில் அதே ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய யுசுப் பாதன் மற்றும் ரஷித் கான் இருவரும் நிலைத்து விளையாடி ஐத்ராபாத் அணியை வெற்றி பெற செய்தனர். ஐத்ராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links