ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29-ம் தேதி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருக்கின்றன. முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற முடியாமல் ஏமாற்றமளித்தன. இருப்பினும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் மிக நன்றாகச் சமநிலையில் இருப்பதோடு இருவரும் நன்கு அனுபவம் வாய்ந்த வீரர்களாகவும், புதிய வீரர்களாகவும் கொண்ட சிறப்பான அணியைப் பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடவுள்ளனர்.
இரு அணிகளும் ரஷித் கான், ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் வார்னர் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் யார் மேலே வருகிறார்கள் என்பது சுவாரசியமாக இருக்கும். மேலும் தனிப்பட்ட வீரர்களுக்கிடையில் ஒரு போராக இருக்கும். ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மூன்று சுவாரஸ்யமான சந்திப்புகளைப் பார்க்கலாம்.
# 1 ஜோஸ் பட்லர் vs ரஷீத் கான்
சமீப காலங்களில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த டி20 பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஒரு போட்டி நிலவும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ரசித் கான் கடந்த ஆண்டு ஐ.பி.எல். லீக்கில் இரு போட்டிகளிலும் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியுள்ளார்.
பட்லர் ரசித் பந்தில் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். ஏனெனில் பட்லர் ராஜஸ்தான் அணிக்கு முக்கியமான வீரர். ராஜஸ்தான் அணி சிறந்த மிகப்பெரிய ஸ்கோர் பெற விரும்பினால் பட்லர் இறுதி வரை களத்தில் இருக்க வேண்டியது மிக அவசியம்.
# 2 டேவிட் வார்னர் vs ஜெயதேவ் உனட்கட்
டேவிட் வார்னர் ஐ.பி.எல். லீக்கிற்கு மீண்டும் வந்தது இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று. தொடக்க ஆட்டத்தில் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து 15 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஒரு இடது கை பேட்ஸ்மேன்னாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தனது அணியை மீண்டும் ஒரு பெரிய வெற்றியை பெற வைப்பார் என நம்பலாம். ஆனால் வார்னருக்கு ராயல்ஸ் அணிக்கு எதிராக இது எளிதாக இருக்காது. ராஜஸ்தான் அணியின் உனட்கட் வேகத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். முந்தைய சீசனில் வார்னரை இரண்டு முறை இவர் அவுட் செய்துள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு வார்னர் ஒப்பனிங் பேட்ஸ்மேன்னாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பவர்ப்ளே ஓவரில் உனட்கட் பந்து வீச்சும் யார் சிறந்தவர் என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.
# 3 ஷகிப் அல் ஹசன் Vs பென் ஸ்டோக்ஸ்
மற்ற வீரர்களின் போட்டியை போல இல்லாமல் இது ஒரு வித்தியாசமான ஒன்றாகும். இரண்டு வீரர்களின் பேட்டிங் திறன் மற்றும் பந்துவீச்சு திறன்களுக்கு இடையே ஒரு போட்டியாகும். இந்த வீரர்கள் இரு அணிகளும் தங்கள் அணிக்கான முக்கிய வீரராக இருந்து வருகின்றனர்.
ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸில் இரண்டாவது பாதியில் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்ய வருகிறார். ஷகிப் அல் ஹசன் தனது இரண்டாவது ஸ்பெல் பந்து வீசும் நேரம்.
ஸ்டாக்ஸின் விக்கெட்டை ஷகிப் எடுப்பாரா என்று பார்ப்பதற்கு இது ஒரு சுவாரசியமான நேரமாக இருக்கும். இதேபோல் ஸ்டாக்ஸின் ஓவர்களில் ஷகிப் சிறப்பாக விளையாடுவாரா என்பதையும் கவனிக்க வேண்டியது இருக்கும். அவரவர் அணிக்கு மிகவும் மதிப்புமிக்க சொத்தாக யார் இருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தங்கள் அணிகள் வெற்றி பெற 100% திறமையை இவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எழுத்து-கணவ் அகர்வால்
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்