2 சுனில் நரைன்
சுனில் நரைன் 2009 ஆம் ஆண்டு டிரினிடாட் அண்டு டொபாக்கோ அணி சார்பில் முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் அந்த தொடரில் அவரால் சோபிக்க முடியவில்லை. 2011 ஆம் ஆண்டு நடந்த கரீபியன் டி20 தொடரில் முதன் முதலாக டி20 போட்டியில் அறிமுகமானார். அந்த தொடரில் ஜொலித்த நரைன் அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் கலக்கினார். குறுகிய காலமே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார். 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாட துவங்கினார். அதன் பிறகு கொல்கத்தா அணியின் முக்கியமான வீரராக மாறிப் போனார்.
அவர் அந்த அணியில் மூலமாக தான் சிறந்த ஆல் ரவுண்டர் என்றும் நிரூபித்தார். அவர் மொத்தம் 108 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்,133 விக்கெட்டுகளை 6.66 என்ற அற்புதமான எகானமி விகிதத்தில் கைப்பற்றி உள்ளார். அவர் பேட்டிங்கில் 771 ரன்களை 17.52 என்ற சராசியுடன் எடுத்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 75 ஆகும். அவர் தன் தேசிய அணிக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தற்போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுனில் நரைன் அந்த அணியின் துருப்பு சீட்டாக இருந்து வருகிறார். அவரை ஆல் ரவுண்டராக மாற்றிய பெருமை கௌதம் கம்பீரையே சேரும். தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த நரைன் தற்போது நடு வரிசையில் விளையாடி வருகிறார்.