3 ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன் முதல் ஐபிஎல் தொடரில் இருந்தே விளையாடி வருகிறார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த தொடரில் ஷேன் வாட்சன் ஆல் ரவுண்டராக ஜொலித்தார். நான்கு அரைசதங்களும் அடித்தார், அதில் ஒன்று அரைஇறுதி போட்டியில் அடிக்கப்பட்டதாகும். அவர் 17 விக்கெட்டுகளையும் நான்கு முறை ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அந்த ஐபிஎல் தொடரின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டிருந்த மேத்யூ ஹைடன் காயமடைந்திருந்ததால் மாற்று வீரராக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு வருவதும் போவதுமாக இருந்து வந்த வாட்சன் அந்த தொடருக்குப் பின் நிரந்தர உறுப்பினர் ஆனார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 5500 ரன்களும் 168 விக்கெட்டுகளை 31.50 என்ற சராசியுடன் வீழ்த்தி உள்ளார். டி20 போட்டியில் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமைக்குரியவர் வாட்சன்.
வாட்சன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டர்களுள் ஒருவர் ஆனார். அதற்கு ஐபிஎல்லே முழுமுதற் காரணம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஷேன் வாட்சன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனாலும் உலகெங்கும் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.