மல்யுத்த போட்டியாக துவங்கப்பட்ட ரெஸ்லிங் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அது வியாபாரமாக மாற்றப்பட்டது. இந்த போட்டிகளுக்கு ரசிகர்களின் அதிகரித்ததுமே இதற்க்கு முக்கிய காரணம். இந்த ,மல்யுத்த போட்டியானது உலகளவில் உள்ள ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தது. இதுவே நாள்போக்கில் WWE, WCW, TNA, ROH, மற்றும் NJPW என பல பெயர்களில் உருவானது. இந்த WWE போட்டிகளை பொறுத்தவரையில் இதில் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பட்டத்தை பெற வேண்டும் எனில் அவர்களை அதற்க்கென அதிக மல்யுத்த திறனும், நன்றாக பேச்சுத்திறனுடனும் இருக்க வேண்டும். நன்றாக மைக்-ல் பேசுபவரே ரசிகர்களின் மனதில் விரைவில் இடம் பிடிப்பார்.
இதையும் படியுங்கள்: WWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்!!!
இந்த மல்யுத்த நிகழ்ச்சியானது 80 களின் காலகட்டத்திற்கு பின்னரே மக்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியது. அப்போது இருந்த மல்யுத்த வீரரான மார்ட்டி ஜனிடி மைக்-ல் சிறப்பாக பேசவே அவர் அப்போது சிறந்த வீரராக விளங்கினார். அதைப்போல சான் மைக்கேல் இந்த இரண்டு திறமையிலும் கலக்க இன்றளவும் சிறந்த WWE வீரர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். இந்த நிகழ்ச்சியை மக்களை பார்க்கவைப்பதற்க்காக பல விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்று தான் போட்டிகளின் போது மல்யுத்த வீரர்களுக்கு வசனங்களை மாறி மாறி பேசவைப்பது. இதில் ஒரு சில முறை வீரர்கள் தங்களது வசனங்களை மறந்து திகைத்து நின்றுள்ளார். அதில் சிறந்த டாப் 4 தருணங்கள் உங்களுக்காக.
#4) ராண்டி ஆர்டன்
WrestleMania 29 வது ஆண்டில் நடைபெற்ற போட்டியில் ரேண்டி ஆர்டன் மற்றும் ஷேமஸ் இணை பிக் ஷோவ்வை வீழ்த்தியதன் மூலம் தி ஷீல்டு அணியை எதிர்கொண்டனர். இது நடைபெற்று முடிந்த பின் இவர்கள் திங்கள் அன்று நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியில் பிக் ஷோ-வை எதிர்கொள்வது குறித்து பேசினர். அப்போது பேசும்போது தனது வரியை மறந்த ரேண்டி , ஷேமஸ்-யிடம் அடுத்து தான் என்ன பேச வேண்டும் என கேட்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு.
#3) தி மிஸ்
WWE நிகழ்ச்சியில் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத ப்ரோமோ வீடியோவாக அமைந்தது மிஸ்-ன் வீடியோ தான். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வளம் வந்தார். அப்போது இவர் தனக்கு இருந்த ரசிகர்களின் வரவேற்பை பயன்படுத்தி பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் சிறந்த அழகான பெண் மல்யுத்த வீராங்கனையை தேர்வு செய்வது. அது குறித்த ப்ரோமோ வீடியோவை ரசிகர்களின் மத்தியில் பேசிவருவார் மிஸ். அப்போது திடீரென அதில் உள்ள ஒரு எண்ணை தவறாக கூறி விடுவார். அவர் அதனை சரியாக கூற வேண்டும் என்பதற்க்காக அந்த எண்ணை திரையிலேயே ஒளிபரப்புவார்கள். எப்படி ஆரம்ப காலங்களில் மிஸ் தனது வசனங்களை கூறுவதில் சற்று தடுமாறி வந்தாலும் அதன் பின் மெக் மோஹன் இவர் மீது வைத்த நம்பிக்கையால் அதன் பின் சிறந்த வீராக உருவானார்.